• Oct 23 2026

நாமல், சாமர சம்பத் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Chithra / Oct 23rd 2026, 12:07 pm
image


இருவேறு வழக்குகளில், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.


கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.


குறித்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இருவரையும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதேவேளை, இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகியோரையும் நவம்பர் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


முறையான அனுமதியின்றி பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம் இலஞ்சமாகப் பணம் பெற்றுக்கொண்டமை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இருவருக்கும் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


இந்த நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


இதனையடுத்து, இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதன்படி, இருவேறு வழக்குகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் காலமும் நவம்பர் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

நாமல், சாமர சம்பத் உள்ளிட்ட நால்வருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு இருவேறு வழக்குகளில், பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ மற்றும் சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் நவம்பர் மாதம் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.கிரிஷ் நிறுவனத்துடன் தொடர்புடைய கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ மற்றும் கிரிஷ் நிறுவனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜானகி சிறிவர்தன ஆகியோரின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.குறித்த வழக்கு இன்று (23) கொழும்பு பிரதான நீதிவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, இருவரையும் நவம்பர் 6ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.இதேவேளை, இலஞ்சம் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் ஆகியோரையும் நவம்பர் 6ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முறையான அனுமதியின்றி பொஸ்பேட் ஏற்றுமதி செய்வதற்கு சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு உதவியதன் மூலம் இலஞ்சமாகப் பணம் பெற்றுக்கொண்டமை மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பில் இருவருக்கும் எதிராக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.இதனையடுத்து, இருவரையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்படி, இருவேறு வழக்குகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, சாமர சம்பத் தசநாயக்க உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் காலமும் நவம்பர் 6ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement