• May 15 2025

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்; முறையிட தொலைபேசி இலக்கம்

Chithra / May 14th 2025, 1:17 pm
image

 

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும். 

எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால் பாடசாலை அதிபர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு அளிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ncpa@childprotection.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடு அளிக்க முடியும்.

அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு சென்றும்  முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள்; முறையிட தொலைபேசி இலக்கம்  பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.இந்த அவசர தொலைபேசி இலக்கம் 24 மணிநேரமும் சேவையில் இருக்கும். எனவே, பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் இடம்பெற்றால் பாடசாலை அதிபர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவ, மாணவிகள் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு முறைப்பாடு அளிக்குமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.பாடசாலைகளில் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ncpa@childprotection.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் முறைப்பாடு அளிக்க முடியும்.அத்துடன் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அலுவலகத்திற்கு சென்றும்  முறைப்பாடுகளை அளிக்க முடியும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement