• May 21 2025

அரச வைத்தியசாலைகளில் கடும் மருந்து பற்றாக்குறை! மோசமாகும் நிலைமை

Chithra / May 21st 2025, 1:11 pm
image

 

நாட்டிலுள்ள  பல அரச வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், வைத்திய விநியோகப் பிரிவில் சுமார் 180 வகையான மருந்துகள் கையிருப்பில் இல்லை. 

மேலும், வைத்தியசாலை அமைப்பில் சுமார் 50 மருந்துகள் கையிருப்பில் இல்லை. நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.

இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்களின் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக வைத்தியசாலை அமைப்பு போன்று பிராந்திய ரீதியாகவும் காண்கிறோம்.  

சில மருந்துப் பற்றாக்குறைகள் வைத்தியசாலை அமைப்பிலேயே உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார். 

 இந்த வேலைநிறுத்தத்திற்கு சுகாதார அமைச்சர், பொது சேவை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். 

அரச வைத்தியசாலைகளில் கடும் மருந்து பற்றாக்குறை மோசமாகும் நிலைமை  நாட்டிலுள்ள  பல அரச வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்க ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.அத்தோடு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளுடன், வலி ​​நிவாரணிகள் மற்றும் இன்சுலின் ஆகியவற்றிற்கும் கடுமையான பற்றாக்குறை நிலவுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கடந்த ஏப்ரல் மாத இறுதிக்குள், வைத்திய விநியோகப் பிரிவில் சுமார் 180 வகையான மருந்துகள் கையிருப்பில் இல்லை. மேலும், வைத்தியசாலை அமைப்பில் சுமார் 50 மருந்துகள் கையிருப்பில் இல்லை. நிலைமை இன்னும் மோசமாகிக் கொண்டிருக்கிறது.இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு வழங்கப்படும் மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைக்காக வழங்கப்படும் சில உபகரணங்களின் பிரச்சினைகள் ஒட்டுமொத்தமாக வைத்தியசாலை அமைப்பு போன்று பிராந்திய ரீதியாகவும் காண்கிறோம்.  சில மருந்துப் பற்றாக்குறைகள் வைத்தியசாலை அமைப்பிலேயே உள்ளன எனத் தெரிவித்துள்ளார்.இதற்கிடையில், பல கோரிக்கைகளை முன்வைத்து நாளை (22) நாடு தழுவிய அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என்று நிறைவுகாண் வைத்திய தொழில் வல்லுநர்களின் ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.  இந்த வேலைநிறுத்தத்திற்கு சுகாதார அமைச்சர், பொது சேவை ஆணைக்குழு மற்றும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் என்று ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement