பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியலில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது.
நேற்று காலை 8.00 மணியளவில், விக்டோரியா அவென்யூவுக்கு அருகே நின்றுகொண்டிருந்த பாடசாலைப் பேருந்து ஒன்றில் ஐந்து மாணவர்கள் இருந்துள்ளனர்.
அந்த சமயம் பேருந்தில் ஏதோ வித்தியாசமான வாசம் வருவதையும் பேருந்தின் முன் பக்கத்திலிருந்து புகை வருவதையும் பேருந்தின் சாரதி கவனித்தார்.
உடனடியாக செயற்பட்ட சாரதி மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கி பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் கூட்டிச் சென்று தங்கவைத்தார். அதன்பின்னர் அவசர உதவியை அழைத்துள்ளார்.
சாரதி மாணவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிக் கொண்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் பேருந்து பயங்கரமாக தீப்பற்றி எரிந்துள்ளது.
சரியான நேரத்தில் அவதானித்து சாகசமாக முடிவெடுத்து மாணவர்கள் ஐவரின் உயிரையும் காப்பாற்றி தன்னுயிரையும் காத்துள்ளார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து பற்றியில் இயங்கும் பேருந்து ஆகும். ஆனால், பற்றியில் ஏற்பட்ட பிரச்சினையால் தீப்பிடிக்கவில்லை என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாடசாலை பேருந்தில் திடீரென பற்றிய தீ ; சாகசமாக செயற்பட்டு மாணவர்களைக் காப்பாற்றிய சாரதி பாடசாலை மாணவர்கள் பயணித்த பேருந்தில் திடீரென தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் கனடாவின் கியூபெக் மாகாணத்திலுள்ள மொன்றியலில் நேற்றுக் காலை இடம்பெற்றுள்ளது. நேற்று காலை 8.00 மணியளவில், விக்டோரியா அவென்யூவுக்கு அருகே நின்றுகொண்டிருந்த பாடசாலைப் பேருந்து ஒன்றில் ஐந்து மாணவர்கள் இருந்துள்ளனர். அந்த சமயம் பேருந்தில் ஏதோ வித்தியாசமான வாசம் வருவதையும் பேருந்தின் முன் பக்கத்திலிருந்து புகை வருவதையும் பேருந்தின் சாரதி கவனித்தார்.உடனடியாக செயற்பட்ட சாரதி மாணவர்களை பேருந்திலிருந்து இறக்கி பாதுகாப்பாக ஒரு கட்டிடத்துக்குள் கூட்டிச் சென்று தங்கவைத்தார். அதன்பின்னர் அவசர உதவியை அழைத்துள்ளார்.சாரதி மாணவர்களைப் பேருந்திலிருந்து இறக்கிக் கொண்டு வெளியே வந்த சிறிது நேரத்தில் பேருந்து பயங்கரமாக தீப்பற்றி எரிந்துள்ளது. சரியான நேரத்தில் அவதானித்து சாகசமாக முடிவெடுத்து மாணவர்கள் ஐவரின் உயிரையும் காப்பாற்றி தன்னுயிரையும் காத்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து பற்றியில் இயங்கும் பேருந்து ஆகும். ஆனால், பற்றியில் ஏற்பட்ட பிரச்சினையால் தீப்பிடிக்கவில்லை என்று தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.