குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படவுள்ள கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புலமைப்பரிசில் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பை பாராட்டும் வகையிலும், லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக்கடனாகவும் இந்தப் புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதுடன், முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வியைத் தொடரும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகள் இதன் மூலம் பயனடையவுள்ளனர்.
லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் திட்டம் குறைந்த வருமானம் பெறும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகளுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படவுள்ள கல்விப் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நாளை (23) பிற்பகல் 2.00 மணிக்கு அநுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.சபாநாயகர் வைத்தியகலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், 2026 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புலமைப்பரிசில் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.லொத்தர் சீட்டு விற்பனை மூலம் ஜனாதிபதி நிதியத்துக்கு கிடைக்கும் நிதிப் பங்களிப்பை பாராட்டும் வகையிலும், லொத்தர் சீட்டு விற்பனையாளர்களுக்கு நன்றிக்கடனாகவும் இந்தப் புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதுடன், முதலாம் தரம் முதல் உயர்தரம் வரை பாடசாலைக் கல்வியைத் தொடரும் லொத்தர் சீட்டு விற்பனையாளர்களின் பிள்ளைகள் இதன் மூலம் பயனடையவுள்ளனர்.