• Apr 15 2026

ஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைத்த சவுதி அரம்கோ!

shanu / Mar 23rd 2026, 10:45 am
image


உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற்காக ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கச்சா எண்ணெய் விநியோகத்தை இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை  ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளே இதற்கு முக்கிய காரணமாகும்.



வெளிநாட்டு ஊடகங்களின்படி, ஏப்ரல் மாதத்தில் செங்கடலில் அமைந்துள்ள யான்பு துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் ‘Arab Light’ வகை கச்சா எண்ணெயை மட்டுமே தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.



இதன் விளைவாக, ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான விநியோகம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதுடன், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் உற்பத்தியும் வரையறுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆசியாவிற்கான கச்சா எண்ணெய் விநியோகத்தை குறைத்த சவுதி அரம்கோ உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவுதி அரம்கோ (Saudi Aramco), ஏப்ரல் மாதத்திற்காக ஆசிய வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் கச்சா எண்ணெய் விநியோகத்தை இரண்டாவது முறையாகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர்ச் சூழல் காரணமாக, ஹோர்முஸ் நீரிணை  ஊடாக மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளே இதற்கு முக்கிய காரணமாகும்.வெளிநாட்டு ஊடகங்களின்படி, ஏப்ரல் மாதத்தில் செங்கடலில் அமைந்துள்ள யான்பு துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படும் ‘Arab Light’ வகை கச்சா எண்ணெயை மட்டுமே தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.இதன் விளைவாக, ஆசிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களுக்கான விநியோகம் கடுமையாகக் கட்டுப்படுத்தப்படுவதுடன், சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் உற்பத்தியும் வரையறுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement