சட்டவிரோத சொத்துக்களைச் சேகரித்த குற்றச்சாட்டில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைதானவர் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, இன்று முற்பகல் அவர் கையூட்டல் ஆணைக்குழுவுக்கு பிரவேசித்திந்தார்.
இதன்போது, விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.
சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சஜின் வாஸூக்கு விளக்கமறியல் சட்டவிரோத சொத்துக்களைச் சேகரித்த குற்றச்சாட்டில் கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைதானவர் இன்று கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.சட்டவிரோத சொத்துக்கள் ஈட்டியது தொடர்பான விசாரணைக்காக வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக, இன்று முற்பகல் அவர் கையூட்டல் ஆணைக்குழுவுக்கு பிரவேசித்திந்தார்.இதன்போது, விசாரணைகளை முன்னெடுத்த அதிகாரிகள் அவரை கைது செய்தனர். சுமார் 243.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமான முறையில் ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.