சீனாவின் ஜெஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்ற 2026 மரதன் போட்டியில், மனித உருவம் கொண்ட ரோபோக்கள் போக்குவரத்துப் பொலிஸாராகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.
‘ஹாங்சிங் நம்பர் 2’ எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோக்கள், ஹுவாங்லோங் விளையாட்டு மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைக் கண்காணித்ததுடன், ரோந்துப் பணிகள், விதிமீறல்கள் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டன.
மரதன் போட்டியின் போக்குவரத்து முகாமைத்துவத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டமை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
வீதிகளில் பொலிஸ் பணியில் ரோபோக்கள் சீனாவின் ஜெஜியாங் மாகாணத்திலுள்ள ஹாங்சோ நகரில் நடைபெற்ற 2026 மரதன் போட்டியில், மனித உருவம் கொண்ட ரோபோக்கள் போக்குவரத்துப் பொலிஸாராகப் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.‘ஹாங்சிங் நம்பர் 2’ எனப் பெயரிடப்பட்ட இந்த ரோபோக்கள், ஹுவாங்லோங் விளையாட்டு மையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்தைக் கண்காணித்ததுடன், ரோந்துப் பணிகள், விதிமீறல்கள் தொடர்பான எச்சரிக்கைகள் மற்றும் பொதுமக்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டன.மரதன் போட்டியின் போக்குவரத்து முகாமைத்துவத்தில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டமை பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.