• Apr 25 2026

வவுனியா வடக்கில் வீதி புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தம்: தவிசாளர் அதிரடி நடவடிக்கை!

shanu / Apr 25th 2026, 5:07 pm
image

வவுனியா வடக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாமடு - சாளம்பை வீதி புனரமைப்புப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.


குறித்த வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு இன்று திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வேலைத்திட்டத்தின் தரத்தினைப் பார்வையிட்டார். இதன்போது, முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைகளில் தரம் குறைவாகவும், திருப்தியற்ற தன்மையும் காணப்படுவதை அவர் அவதானித்தார்.


இதனையடுத்து, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கோடும், நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் வகையிலும் குறித்த வேலைத்திட்டத்தை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அவர் பணிப்புரை விடுத்தார்.


இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுத்துள்ள தவிசாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களைக் கொண்டு இவ்வீதிப் பணிகளை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.


தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, வீதி வேலைகளின் தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே எஞ்சிய பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு மேலும் தெரிவித்தார்.

வவுனியா வடக்கில் வீதி புனரமைப்புப் பணிகள் இடைநிறுத்தம்: தவிசாளர் அதிரடி நடவடிக்கை வவுனியா வடக்கு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாமடு - சாளம்பை வீதி புனரமைப்புப் பணிகளை உடனடியாக இடைநிறுத்துமாறு தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.குறித்த வீதி புனரமைப்பு வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு இன்று திடீர் கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டு வேலைத்திட்டத்தின் தரத்தினைப் பார்வையிட்டார். இதன்போது, முன்னெடுக்கப்பட்டு வரும் வேலைகளில் தரம் குறைவாகவும், திருப்தியற்ற தன்மையும் காணப்படுவதை அவர் அவதானித்தார்.இதனையடுத்து, மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கோடும், நிலையான அபிவிருத்தியை உறுதிப்படுத்தும் வகையிலும் குறித்த வேலைத்திட்டத்தை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு அவர் பணிப்புரை விடுத்தார்.இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுத்துள்ள தவிசாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளரின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களைக் கொண்டு இவ்வீதிப் பணிகளை முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உள்ளூராட்சி உதவி ஆணையாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளார்.தொழில்நுட்ப உத்தியோகத்தர்களின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, வீதி வேலைகளின் தரம் உறுதி செய்யப்பட்ட பின்னரே எஞ்சிய பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என வவுனியா வடக்கு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணவேணி திருநாவுக்கரசு மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement