நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக இலங்கையின் பொதுச் சுகாதார சேவை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (25) அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாஸ,
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
உரிய தீர்வுகள் எட்டப்படாவிட்டால், அடுத்த வாரத்திற்குள் நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பு முழுமையாக முடங்கும் அல்லது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.
ஏனைய அரச துறை ஊழியர்களைப் போலன்றி, மருத்துவர்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளோ அல்லது எரிபொருள் கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை.
அவசர அழைப்புகள் மற்றும் மேலதிக நேரக் கடமைகளுக்காகத் தமது சொந்தச் செலவிலேயே அவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீடு, ஒரு வாரகாலக் கடமைகளுக்கு எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், எரிபொருள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருப்பது நோயாளர் பராமரிப்புப் பணிகளைப் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே இந்த இக்கட்டான நிலை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.
இன்றைய அவசரக் கூட்டத்தின் போது சுகாதார சேவையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
இதுஇப்படி இருக்க வெளிநாட்டு செலாவணி தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய சேவைகளின் கட்டண அதிகரிப்பு காரணமாக, உள்நாட்டு சந்தையில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது தவிர்க்க முடியாமல் போகலாம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.
அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப மருந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் விலைகளை திருத்தம் செய்வது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தி வருவதால், எதிர்காலத்தில் மருந்து விலைகள் கணிசமாக உயரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.
ஏற்கனவே அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், மேலதிக விலை உயர்வு ஏற்பட்டால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் மனநல பாதிப்புகளுக்கு நீண்டகால சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவர்.
மேலும், அரசாங்கம் மருந்துக் கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தாலும், சில மருந்தகங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வதாக மருத்துவர் சமல் சஞ்சீவ குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போது, அவர்களுக்கு மானியம் அல்லது நிவாரண பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
சுகாதார சேவைகள் முடங்கும் அபாயம் மருந்துகளின் விலையும் உயரும் - அவசரமாக கூடும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகள் காரணமாக இலங்கையின் பொதுச் சுகாதார சேவை பாரிய வீழ்ச்சியை எதிர்நோக்கியுள்ள நிலையில், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் இன்று (25) அவசரக் கூட்டமொன்றை நடத்தவுள்ளது.இது குறித்து ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் மருத்துவர் பிரபாத் சுகததாஸ,நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.உரிய தீர்வுகள் எட்டப்படாவிட்டால், அடுத்த வாரத்திற்குள் நாட்டின் மருத்துவமனைக் கட்டமைப்பு முழுமையாக முடங்கும் அல்லது கடுமையான பாதிப்புகளைச் சந்திக்கும் என அவர் எச்சரித்துள்ளார்.ஏனைய அரச துறை ஊழியர்களைப் போலன்றி, மருத்துவர்களுக்கு உத்தியோகபூர்வ போக்குவரத்து வசதிகளோ அல்லது எரிபொருள் கொடுப்பனவுகளோ வழங்கப்படுவதில்லை. அவசர அழைப்புகள் மற்றும் மேலதிக நேரக் கடமைகளுக்காகத் தமது சொந்தச் செலவிலேயே அவர்கள் பயணிக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.தற்போது நடைமுறையிலுள்ள QR குறியீடு அடிப்படையிலான எரிபொருள் ஒதுக்கீடு, ஒரு வாரகாலக் கடமைகளுக்கு எவ்விதத்திலும் போதுமானதாக இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.அத்துடன், எரிபொருள் வரிசைகளில் நீண்ட நேரம் காத்திருப்பது நோயாளர் பராமரிப்புப் பணிகளைப் பாதிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்திற்கு முன்னரே இந்த இக்கட்டான நிலை குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் எவ்வித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என சங்கம் அதிருப்தி வெளியிட்டுள்ளது.இன்றைய அவசரக் கூட்டத்தின் போது சுகாதார சேவையின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.இதுஇப்படி இருக்க வெளிநாட்டு செலாவணி தட்டுப்பாடு, எரிபொருள் விலை உயர்வு மற்றும் ஏனைய சேவைகளின் கட்டண அதிகரிப்பு காரணமாக, உள்நாட்டு சந்தையில் மருந்துப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பது தவிர்க்க முடியாமல் போகலாம் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் விசேட மருத்துவ நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.அதிகரித்து வரும் செலவுகளுக்கு ஏற்ப மருந்து இறக்குமதியாளர்களும், உள்ளூர் உற்பத்தியாளர்களும் விலைகளை திருத்தம் செய்வது குறித்து ஏற்கனவே கவனம் செலுத்தி வருவதால், எதிர்காலத்தில் மருந்து விலைகள் கணிசமாக உயரக்கூடும் என அவர் சுட்டிக்காட்டினார்.ஏற்கனவே அத்தியாவசிய மருந்துகளின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில், மேலதிக விலை உயர்வு ஏற்பட்டால் நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் மற்றும் மனநல பாதிப்புகளுக்கு நீண்டகால சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மிக மோசமாக பாதிக்கப்படுவர்.மேலும், அரசாங்கம் மருந்துக் கட்டுப்பாட்டு விலைகளை வர்த்தமானி மூலம் அறிவித்திருந்தாலும், சில மருந்தகங்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வதாக மருத்துவர் சமல் சஞ்சீவ குற்றம் சுமத்தியுள்ளார்.இதேவேளை, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளைக் கொள்வனவு செய்யும் போது, அவர்களுக்கு மானியம் அல்லது நிவாரண பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.