• Aug 19 2025

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு

Chithra / Aug 18th 2025, 4:30 pm
image

 

கட்டுநாயக்க - பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வேலைபளுமிக்க நேரங்களில், பயணிகளுக்கு தாமதமின்றி சேவையை வழங்குவதற்கும், சனநெரிசலை முகாமை செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விமான பயணிகள் மற்றும் விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் வசதி கருதி இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது.


கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்பவர்களுக்கு மட்டுப்பாடு  கட்டுநாயக்க - பண்டாரநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் பயணிகளுடன் வருபவர்கள் பிரவேசிப்பதனை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.அதன்படி, வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் இரவு 10 மணிமுதல் நள்ளிரவு வரையான காலப்பகுதியினுள், பயணிகளுடன் வருபவர்கள், விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், வேலைபளுமிக்க நேரங்களில், பயணிகளுக்கு தாமதமின்றி சேவையை வழங்குவதற்கும், சனநெரிசலை முகாமை செய்வதற்கும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே, விமான பயணிகள் மற்றும் விமான நிலையத்தை பயன்படுத்துபவர்களின் வசதி கருதி இந்த நடவடிக்கைக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விமான சேவை நிறுவனம் கோரியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement