• May 24 2026

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் கட்டமைப்பு மீட்பு

Chithra / Dec 8th 2025, 9:18 am
image


அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். 


தேசிய வீடமைப்பு அமைச்சு காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


அனர்த்த நிலைமை காரணமாக நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் செயலிழந்துள்ளன.அவற்றை புனரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


குறிப்பாக இதன் காரணமாக கண்டி மாவட்டத்தின் நீர் வழங்கல் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


எவ்வாறாயினும், நீர் வழங்கல் ஊழியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, சேதமடைந்த நீர் வழங்கல் அமைப்புகளில் சுமார் 90 சதவீதத்தை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.


சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கான பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படும்.மீட்பு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதால் புனரமைப்பு பணிகளை  முன்னெடுக்க  முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.

அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட நீர் வழங்கல் கட்டமைப்பு மீட்பு அனர்த்த நிலைமையால் நீர் வழங்கல் கட்டமைப்புக்கு ஏற்பட்ட பாதிப்புகளில் சுமார் 90 சதவீதமானவை தற்போது வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். தேசிய வீடமைப்பு அமைச்சு காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அனர்த்த நிலைமை காரணமாக நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 343 நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 156 நிலையங்கள் செயலிழந்துள்ளன.அவற்றை புனரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.குறிப்பாக இதன் காரணமாக கண்டி மாவட்டத்தின் நீர் வழங்கல் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், நீர் வழங்கல் ஊழியர்களின் அர்ப்பணிப்பு காரணமாக, சேதமடைந்த நீர் வழங்கல் அமைப்புகளில் சுமார் 90 சதவீதத்தை வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.சேதமடைந்த வீடுகளை புனரமைப்பதற்கான பணிகள் வெகுவிரைவில் மேற்கொள்ளப்படும்.மீட்பு பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதால் புனரமைப்பு பணிகளை  முன்னெடுக்க  முடியாத நிலை காணப்படுகிறது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement