• Aug 12 2025

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ராஜினாமா

Chithra / Aug 12th 2025, 10:41 am
image

 

தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏகநாயக்க ராஜினாமா செய்துள்ளார். 

அவரது ராஜினாமா கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் பதவியும் வெற்றிடமாகவுள்ளது. 

அதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போது இரண்டு உறுப்பினர் பதவிகள் வெற்றிடமாக இருப்பதாக ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து சகாதேவன் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்த முடிவை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்மைப்பு அமைச்சுக்கு இன்று அறிவித்துள்ளார்.


தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ராஜினாமா  தேசிய பொலிஸ் ஆணைக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து ரேணுகா ஏகநாயக்க ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா கடிதம் ஏற்கனவே அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானம் மூலம் பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸ்மா அதிபர் பதவியும் வெற்றிடமாகவுள்ளது. அதன்படி தேசிய பொலிஸ் ஆணைக்குழுவில் தற்போது இரண்டு உறுப்பினர் பதவிகள் வெற்றிடமாக இருப்பதாக ஆணைக்குழுவின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பனை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் பதவியிலிருந்து சகாதேவன் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த முடிவை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்மைப்பு அமைச்சுக்கு இன்று அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement