• May 28 2025

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு புனர்வாழ்வு!

Thansita / May 27th 2025, 10:39 pm
image

யாழ்.  சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் நேற்றையதினம் 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்

அதன்படி அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு புனர்வாழ்வு யாழ்.  சுன்னாகம் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் கைதான 26 வயதுடைய பெண்ணொருவர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண் நேற்றையதினம் 340 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் போதைப்பொருள் பாவனைக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.இந்நிலையில் அவர் மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்அதன்படி அவரை 6 மாதங்களுக்கு புனர்வாழ்வுக்கு உட்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement