• Nov 07 2025

மன்னார் கடலில் மீனவர்களின் வலைகளில் சிக்கும் சிவப்பு நண்டு - வலை தொகுதிகள் சேதம்

Chithra / Oct 15th 2025, 11:10 am
image


மன்னார் - தாழ்வுபாடு கடற்பரப்பில்  சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின்  தாக்கம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக' சிவப்பு நண்டு'  என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால்  மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.


இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில்  பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளது.

குறித்த நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மன்னார் கடலில் மீனவர்களின் வலைகளில் சிக்கும் சிவப்பு நண்டு - வலை தொகுதிகள் சேதம் மன்னார் - தாழ்வுபாடு கடற்பரப்பில்  சிவப்பு நண்டு என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டின்  தாக்கம் காரணமாக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.குறித்த கிராமத்தில் கடந்த பல நாட்களாக' சிவப்பு நண்டு'  என அழைக்கபடுகின்ற ஒரு வகையான நண்டினால்  மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.இந்த நண்டுகள் மீனவர்களின் வலைகளில்  பாரியளவில் சிக்குவதால் மீனவர்களின் வலை தொகுதிகள் சேதமடைந்துள்ளது.குறித்த நண்டை எந்த ஒரு தேவைக்கும் பயன்படுத்த முடியாது என மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.மீனவர்களின் வலைகளில் சிக்கும் குறித்த நண்டுகளை வலையில் இருந்து பிரித்து எடுக்க முடியாத நிலை காணப்படுவதோடு, இதனால் வலைகள் பாதிக்கப்படுவதோடு, தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அப்பகுதி மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement