• Nov 07 2025

இந்திய கடற்கரையில் பதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள்; இலங்கைக்கு கடத்த முயன்ற நிலையில் பறிமுதல்!

shanuja / Oct 15th 2025, 11:26 am
image

இலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  இலங்கை  மதிப்பில் 10 லட்சத்து 50000 ரூபா பெறுமதியிலான 1200 கிலோ சமையல் மஞ்சள்  பொதிகளை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.


ராமநாதபுரம் கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.


இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்து வருகின்றனர்.


இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உச்சிப்புளி  அருகே களிமண்குண்டு அடுத்த சல்லித்தோப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக கடற்கரை ஓரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.


இதையடுத்து 28 மூட்டைகளில் இருந்த சுமார் 1200 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.


 பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள் 10 லட்சத்து 50000 ரூபா பெறுமதியாக  (இந்திய  மதிப்பு ரூ.3 லட்சம்)  இருக்கும் எனவும், மீனவர்கள் பொதுமக்கள் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்திய கடற்கரையில் பதுக்கப்பட்ட 10 லட்சம் ரூபா பெறுமதியான மஞ்சள்; இலங்கைக்கு கடத்த முயன்ற நிலையில் பறிமுதல் இலங்கைக்கு கடத்துவதற்காக உச்சிப்புளி அடுத்த சல்லித் தோப்பு கடற்கரையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த  இலங்கை  மதிப்பில் 10 லட்சத்து 50000 ரூபா பெறுமதியிலான 1200 கிலோ சமையல் மஞ்சள்  பொதிகளை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.ராமநாதபுரம் கடற்கரை இலங்கைக்கு மிக அருகே இருப்பதால் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு கஞ்சா, சமையல் மஞ்சள், கடல் குதிரை, கடல் அட்டை உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது.இலங்கைக்கு கடத்தல் பொருட்கள் கடத்தப்பட்டு வருவதை சுங்கத்துறை அதிகாரிகள் கண்காணித்து கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தி பொருட்களை பறிமுதல் செய்வதுடன் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் கைது செய்து வருகின்றனர்.இந்நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் உச்சிப்புளி  அருகே களிமண்குண்டு அடுத்த சல்லித்தோப்பு கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது சந்தேகத்திற்கு இடமாக கடற்கரை ஓரம் கிடந்த மூட்டைகளை சோதனை செய்ததில் அதில் இலங்கைக்கு கடத்துவதற்காக சமையல் மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.இதையடுத்து 28 மூட்டைகளில் இருந்த சுமார் 1200 கிலோ எடை கொண்ட சமையல் மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த சுங்கத்துறையினர் ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு எடுத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட சமையல் மஞ்சள் 10 லட்சத்து 50000 ரூபா பெறுமதியாக  (இந்திய  மதிப்பு ரூ.3 லட்சம்)  இருக்கும் எனவும், மீனவர்கள் பொதுமக்கள் கடத்தல் சம்பவங்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுங்கத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement