• Apr 30 2025

வியாபார நிலையத்தில் வாக்காளர் அட்டைகள் மீட்பு; தபால் ஊழியர் உட்பட இருவர் கைது!

Chithra / Apr 30th 2025, 3:56 pm
image


வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், தபால் ஊழியர் ஒருவரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்

நேற்றுமுன்தினம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையத்தில் ஒருதொகை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகள் இருப்பதாக தேர்தல் தினங்களுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து ஒருதொகை வாக்காளர் அட்டையினை மீட்டுள்ளனர்.

இதேவேளை அதனை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக வியாபார நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்தப்பகுதிக்குரிய தபால் ஊழியரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட வியாபாரநிலைய உரிமையாளரின் சகோதரன் தேசியமக்கள் சக்தியின் வவுனியா மாநகரசபைக்காக போட்டியிடும் வேட்பாளர் குறிப்பிடத்தக்கது.

அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வியாபார நிலையத்தில் வாக்காளர் அட்டைகள் மீட்பு; தபால் ஊழியர் உட்பட இருவர் கைது வவுனியா பூந்தோட்டம் பகுதியில் உள்ள வியாபார நிலையத்தில் ஒருதொகை வாக்காளர் அட்டைகள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆளும்கட்சி வேட்பாளர் ஒருவரின் சகோதரனும், தபால் ஊழியர் ஒருவரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றுமுன் தினம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்நேற்றுமுன்தினம் பூந்தோட்டம் பகுதியில் உள்ள பலசரக்கு வியாபார நிலையத்தில் ஒருதொகை உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குரிய வாக்காளர் அட்டைகள் இருப்பதாக தேர்தல் தினங்களுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் மற்றும் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்ததுடன் அங்கிருந்து ஒருதொகை வாக்காளர் அட்டையினை மீட்டுள்ளனர்.இதேவேளை அதனை உடமையில் வைத்திருந்த குற்றத்திற்காக வியாபார நிலையத்தின் உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அந்தப்பகுதிக்குரிய தபால் ஊழியரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.கைதுசெய்யப்பட்ட வியாபாரநிலைய உரிமையாளரின் சகோதரன் தேசியமக்கள் சக்தியின் வவுனியா மாநகரசபைக்காக போட்டியிடும் வேட்பாளர் குறிப்பிடத்தக்கது.அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement