• May 01 2025

வன்னி அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநருடன் ரவிகரன் எம்.பி பேச்சு..!

Sharmi / Apr 19th 2025, 4:31 pm
image

வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விடயங்களிலுள்ள சிக்கல் நிலமைகள் மற்றும், வன்னிப் பகுதியிலுள்ள சில அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். 

யாழில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்றையதினம்(19)  இடம்பெற்ற சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு ஆளுநருக்கு இந்த விடயங்களை எடுத்துரைத்துள்ளார். 

இந்நிலையில் தம்மால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள்தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆளுநர் இதன்போது தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். 

இச் சந்திப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா மாவட்டங்களில் அதாவது வன்னியில் காணப்படும் சில குறைபாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண அளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். 

குறிப்பாக வன்னிப் பகுதியில் காணி விடயங்களில் இருக்கின்ற சிக்கல் நிலமைகள் தொடர்பிலும், அபிவிருத்தியுடன் தொடர்பான விடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். 

அளுநரிடம் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வன்னிப் பகுதி காணிகள் தொடர்பான சிக்கல் நிலமைகள், வன்னி அபிவிருத்தியுடன் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார் அந்தவகையில் இச்சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது  எனவும் தெரிவித்தார்.

வன்னி அபிவிருத்தி விடயங்கள் தொடர்பில் வடக்கு ஆளுநருடன் ரவிகரன் எம்.பி பேச்சு. வன்னிப் பகுதிகளில் காணப்படும் காணி விடயங்களிலுள்ள சிக்கல் நிலமைகள் மற்றும், வன்னிப் பகுதியிலுள்ள சில அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனிடம் எடுத்துரைத்துள்ளார். யாழில் அமைந்துள்ள வடக்குமாகாண ஆளுநரின் அலுவலகத்தில் இன்றையதினம்(19)  இடம்பெற்ற சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வடக்கு ஆளுநருக்கு இந்த விடயங்களை எடுத்துரைத்துள்ளார். இந்நிலையில் தம்மால் எடுத்துரைக்கப்பட்ட விடயங்கள்தொடர்பில் கவனம் செலுத்துவதாக ஆளுநர் இதன்போது தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இச் சந்திப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில், முல்லைத்தீவு, மன்னார்,வவுனியா மாவட்டங்களில் அதாவது வன்னியில் காணப்படும் சில குறைபாடுகள் தொடர்பாக வடக்கு மாகாண அளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியிருந்தேன். குறிப்பாக வன்னிப் பகுதியில் காணி விடயங்களில் இருக்கின்ற சிக்கல் நிலமைகள் தொடர்பிலும், அபிவிருத்தியுடன் தொடர்பான விடங்கள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். அளுநரிடம் என்னால் சுட்டிக்காட்டப்பட்ட வன்னிப் பகுதி காணிகள் தொடர்பான சிக்கல் நிலமைகள், வன்னி அபிவிருத்தியுடன் தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவதாகத் தெரிவித்தார் அந்தவகையில் இச்சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது  எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement