கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதுகாப்புப் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சூரியபுர காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இந்த ஆயுதம் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். இது T-56 ரகத் தோட்டாக்களையும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீட்கப்பட்ட ஆயுதம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் சூரியபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கந்தளாய் காட்டுப்பகுதியில் உள்நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கி மீட்பு கந்தளாய், சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று பாதுகாப்புப் பிரிவினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.கந்தளாய் இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தத் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கந்தளாய் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் சூரியபுர காட்டுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது இந்த ஆயுதம் மீட்கப்பட்டது.மீட்கப்பட்ட துப்பாக்கி உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். இது T-56 ரகத் தோட்டாக்களையும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மீட்கப்பட்ட ஆயுதம் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கந்தளாய் சூரியபுர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.