கடந்த ஜனவரி 30ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பல சட்டத்தரணிகள், நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் வைத்து ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் என உரிமை கோரிய நபர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்தும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாமை குறித்தும், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமை குறித்தும் சங்கம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு, சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை உடனடியாக முன்னெடுக்குமாறும், அதன் உண்மைகளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணிகள் அச்சமின்றி தங்களது தொழில்முறை கடமைகளை ஆற்றுவதற்கு இத்தகைய செயல்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, நாட்டின் நீதி நிர்வாக கட்டமைப்பையே சீர்குலைக்கும் ஒரு ஆபத்தான முன்மாதிரி என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
நீதிமன்ற வளாகத்தில் சட்டத்தரணிகள் மீது தாக்குதல் -சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம் கடந்த ஜனவரி 30ஆம் திகதி நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையான பல சட்டத்தரணிகள், நீதிமன்ற வளாகத்திற்கு முன்னால் வைத்து ஒரு குழுவினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.பாதிக்கப்பட்ட தரப்பினர் என உரிமை கோரிய நபர்களே இந்தத் தாக்குதலை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இச்சம்பவம் நடந்து பல நாட்கள் கடந்தும், இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படாமை குறித்தும், அவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமை குறித்தும் சங்கம் தனது கவலையை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு, சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய மற்றும் செயலாளர் சதுர கல்ஹேன ஆகியோர் கையொப்பமிட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.இச்சம்பவம் குறித்து முறையான மற்றும் பக்கச்சார்பற்ற விசாரணையை உடனடியாக முன்னெடுக்குமாறும், அதன் உண்மைகளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கை செய்யுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சட்டத்தரணிகள் அச்சமின்றி தங்களது தொழில்முறை கடமைகளை ஆற்றுவதற்கு இத்தகைய செயல்கள் பெரும் அச்சுறுத்தலாக அமைவதோடு, நாட்டின் நீதி நிர்வாக கட்டமைப்பையே சீர்குலைக்கும் ஒரு ஆபத்தான முன்மாதிரி என்றும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்தவும், சட்டத்தரணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்ப்பதாகவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.