• May 04 2026

தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வவுனியா மாணவி சாதனை; குவியும் பாராட்டு

Chithra / Jan 31st 2026, 9:17 pm
image


தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவி தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சு மற்றும் காலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, தேசிய இலக்கிய போட்டித் தொடரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற தேசிய இலக்கிய விழாவின் போது வழங்கி வைக்கப்பட்டது.


இதன்போது, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவி பிரபாகரன் வினுசா கனிஸ்ட பிரிவில் பாடல் நயத்தல் நிகழ்வில தேசிய ரீதியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், பணப் பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்.


இதேவேளை, பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குறித்த மாணவியின் தேசிய ரீதியிலான சாதனை பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


தேசிய ரீதியில் முதலிடம் பெற்று வவுனியா மாணவி சாதனை; குவியும் பாராட்டு தேசிய இலக்கியப் போட்டியில் வவுனியா இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவி தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள்  அமைச்சு மற்றும் காலாசார அலுவல்கள் திணைக்களம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த, தேசிய இலக்கிய போட்டித் தொடரில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான விருதுகளும் சான்றிதழ்களும் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெற்ற தேசிய இலக்கிய விழாவின் போது வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது, வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வவுனியா தெற்கு வலயத்தைச் சேர்ந்த இராசேந்திரங்குளம் அ.த.க பாடசாலை மாணவி பிரபாகரன் வினுசா கனிஸ்ட பிரிவில் பாடல் நயத்தல் நிகழ்வில தேசிய ரீதியில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கத்தையும், பணப் பரிசில்களையும் பெற்றுக் கொண்டார்.இதேவேளை, பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்த குறித்த மாணவியின் தேசிய ரீதியிலான சாதனை பலரது பாராட்டுக்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement