நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் வெளிகளில் விளையாடும் போது சிறுவர்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்துரைத்த விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா சிக்குன்குனியா மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார்.
எனினும் சிறுவர்களுக்கு தற்போது பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிகமாக சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விளையாடக்கூடும்.
அவ்வாறு செல்லும் போது பாதணிகளை அணிவிக்குமாறும் பெற்றோருக்கு விசேட மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்.
சதுப்பு நிலங்கள் மற்றும் வயல்வெளிகளில் விளையாடும் சிறுவர்களுக்கு, ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு காய்ச்சல், கண்கள் சிவத்தல் அல்லது மஞ்சள் நிறமாகுதல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் மற்றும் வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவர் ஒருவரை நாடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவற்றை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் அது சிறுநீரகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
இலங்கையில் வேகமாக பரவும் எலிக்காய்ச்சல் - எச்சரிக்கும் விசேட மருத்துவ நிபுணர் நாடளாவிய ரீதியில் எலிக்காய்ச்சல் பரவும் வீதம் தற்போது அதிகரித்துள்ளதாக கொழும்பு ரிட்ஜ்வே சிறுவர் போதனா மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். எனவே சதுப்பு நிலங்கள் மற்றும் வயல் வெளிகளில் விளையாடும் போது சிறுவர்கள் மிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில் கருத்துரைத்த விசேட மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா சிக்குன்குனியா மற்றும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக தெரிவித்தார். எனினும் சிறுவர்களுக்கு தற்போது பாடசாலை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் அவர்கள் அதிகமாக சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளில் விளையாடக்கூடும். அவ்வாறு செல்லும் போது பாதணிகளை அணிவிக்குமாறும் பெற்றோருக்கு விசேட மருத்துவ நிபுணர் அறிவுறுத்தியுள்ளார். சதுப்பு நிலங்கள் மற்றும் வயல்வெளிகளில் விளையாடும் சிறுவர்களுக்கு, ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு காய்ச்சல், கண்கள் சிவத்தல் அல்லது மஞ்சள் நிறமாகுதல், சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுதல் மற்றும் வயிற்றுவலி போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவர் ஒருவரை நாடுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார். இவற்றை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால் அது சிறுநீரகத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்துள்ளார்.