முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டு, பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று காலை சென்றிருந்தார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை கணிக்க முடியாது.
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என்று நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
சட்டத்தை அமுல்படுத்துவதும், அது குறித்து மக்கள் கொண்டுள்ள புரிதலும் மிகவும் முக்கியம் என்றும், சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிடுவதால் குறித்த செயல்பாட்டில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் சஜித் பிரேமதாச கூறினார்.
நான் அவரைச் சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.
ரணில் கைதை முன்கூட்டிய கணித்த மூன்றாம் தரப்பினரால் நீதிமன்றம் அவமதிப்பு - எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது தொடர்பில் மூன்றாம் தரப்பினர் ஒருவர் முன்கூட்டியே கணித்திருக்கின்றமை நாட்டின் ஜனநாயகத்தையும் நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளதென எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.கைதுசெய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டு, பின்னர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட்டு நலம் விசாரிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிறைச்சாலை வைத்தியசாலைக்கு இன்று காலை சென்றிருந்தார்.இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். நீதிக்கான செயல்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி செயல்படுத்தப்படும் நேரத்தில், சட்டத்தில் குறிப்பிடப்படாத மூன்றாம் தரப்பினரால் சட்டத்தின் இறுதி முடிவை கணிக்க முடியாது.இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை என்றும், ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் என்றால், சட்டத்தை அமுல்படுத்தும் முறை சரியானது என்று நாட்டு மக்கள் நம்ப வேண்டும் என்றும் சஜித் பிரேமதாச கூறினார். சட்டத்தை அமுல்படுத்துவதும், அது குறித்து மக்கள் கொண்டுள்ள புரிதலும் மிகவும் முக்கியம் என்றும், சமூக ஊடகங்களில் ஒருவர் கணிப்புகளை வெளியிடுவதால் குறித்த செயல்பாட்டில் ஒரு தீவிரமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்றும் சஜித் பிரேமதாச கூறினார். நான் அவரைச் சந்தித்தேன். அவர் நலமாக இருக்கிறார். மேலும், அவரது உடல்நிலை பாதுகாக்கப்பட வேண்டும். மருந்துகள் வழங்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம்." என்றார்.