• Jul 05 2026

கொழும்பில் டெங்கு அச்சுறுத்தல் கழிவு அகற்றலை விரைவுபடுத்த உத்தரவு

dorin / Jul 4th 2026, 8:06 pm
image

டெங்கு நோய் பரவக்கூடிய கடுமையான அபாயம் காணப்படுவதால், இந்த நெருக்கடியை வெல்வதற்கு அரச நிறுவனங்களுக்கு இடையே உள்ள பரஸ்பர தொடர்பை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா தெரிவித்துள்ளார். 

கொழும்பு நகரின் கழிவு தொடர்பான பிரச்சினை மற்றும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் நேற்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதுள்ள கழிவு சேகரிக்கும் செயல்முறையை மேலும் முறைப்படுத்தவும், வளங்களை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்தவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். 

அதேபோல், நீண்டகால செயல்பாட்டு வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்டுள்ள வலயங்களில் தற்போது தேங்கிக்கிடக்கும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். 

அத்துடன், தற்போதுள்ள கழிவு முகாமைத்துவம் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக, அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்புடன் கூடிய, விரைவான மற்றும் நிலையான அணுகுமுறையின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். 

மிகவும் தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரமொன்றை உருவாக்குவதற்காக, தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களும் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார். 

தற்போதுள்ள கழிவு சேகரிப்பு செயல்முறையை மிகவும் முறைப்படுத்தவும், வளப் பயன்பாட்டை அதிகபட்ச செயல்திறனுடன் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்தக் கலந்துரையாடலின் போது, தற்போதைய கழிவு முகாமைத்துவம் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பிரச்சினைகளுக்கு நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வை வழங்குவதற்காக எடுக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால உத்திகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.


கொழும்பில் டெங்கு அச்சுறுத்தல் கழிவு அகற்றலை விரைவுபடுத்த உத்தரவு டெங்கு நோய் பரவக்கூடிய கடுமையான அபாயம் காணப்படுவதால், இந்த நெருக்கடியை வெல்வதற்கு அரச நிறுவனங்களுக்கு இடையே உள்ள பரஸ்பர தொடர்பை அதிகபட்சமாகப் பயன்படுத்த வேண்டும் என பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தா தெரிவித்துள்ளார். கொழும்பு நகரின் கழிவு தொடர்பான பிரச்சினை மற்றும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து பாதுகாப்புச் செயலாளரின் தலைமையில் நேற்று (03) நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள கழிவு சேகரிக்கும் செயல்முறையை மேலும் முறைப்படுத்தவும், வளங்களை அதிகபட்ச செயல்திறனுடன் பயன்படுத்தவும் பாதுகாப்புச் செயலாளர் இதன்போது அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அதேபோல், நீண்டகால செயல்பாட்டு வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்டுள்ள வலயங்களில் தற்போது தேங்கிக்கிடக்கும் கழிவுகளை விரைவாக அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர் அறிவுறுத்தினார். அத்துடன், தற்போதுள்ள கழிவு முகாமைத்துவம் சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுப்பதற்காக, அனைத்து அரச நிறுவனங்களினதும் ஒருங்கிணைப்புடன் கூடிய, விரைவான மற்றும் நிலையான அணுகுமுறையின் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். மிகவும் தூய்மையான, ஆரோக்கியமான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நகரமொன்றை உருவாக்குவதற்காக, தொடர்புடைய அனைத்துப் பங்குதாரர்களும் ஒத்துழைப்புடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தினார். தற்போதுள்ள கழிவு சேகரிப்பு செயல்முறையை மிகவும் முறைப்படுத்தவும், வளப் பயன்பாட்டை அதிகபட்ச செயல்திறனுடன் மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கலந்துரையாடலின் போது, தற்போதைய கழிவு முகாமைத்துவம் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டதுடன், பிரச்சினைகளுக்கு நிரந்தரமான மற்றும் நிலையான தீர்வை வழங்குவதற்காக எடுக்கக்கூடிய நடைமுறைச் சாத்தியமான நடவடிக்கைகள் மற்றும் நீண்டகால உத்திகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement