• Aug 27 2025

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல - சட்ட ஆட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது. - கந்தசாமி பிரபு எம்.பி!

shanuja / Aug 26th 2025, 4:45 pm
image

முன்னாள் ஜனாதிபதியின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. சட்ட ஆட்சியே நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.  


போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று (26) இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். 



இதன் போது நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வீதி புனரமைப்பு, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான விடையங்கள், பொதுப் போக்குவரத்து, குடிநீர் பிரச்சனை, காணிப் பிரச்சனைகள், பழுகாமம் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும், வீட்டுத் திட்டங்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை தொடர்பான விடையங்கள், யானை மனித மோதல் உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடியதுடன், பல விடையங்களுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டன.


குறித்த அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், போரதீவுப்பற்று  பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலகம், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அதிகளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்ததுடன், சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

ரணிலின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல - சட்ட ஆட்சி நிலைநாட்டப்பட்டுள்ளது. - கந்தசாமி பிரபு எம்.பி முன்னாள் ஜனாதிபதியின் கைது அரசியல் பழிவாங்கல் அல்ல. சட்ட ஆட்சியே நிலைநாட்டப்பட்டுள்ளது என்று பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்.  போரதீவுப்பற்று பிரதேசத்திற்கான பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டம் இன்று (26) இடம்பெற்ற போது அதில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார். இதன் போது நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான வீதி புனரமைப்பு, விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான விடையங்கள், பொதுப் போக்குவரத்து, குடிநீர் பிரச்சனை, காணிப் பிரச்சனைகள், பழுகாமம் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாகவும், வீட்டுத் திட்டங்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபை தொடர்பான விடையங்கள், யானை மனித மோதல் உள்ளிட்ட மேலும் பல விடையங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடியதுடன், பல விடையங்களுக்கு தீர்வுகளும் எட்டப்பட்டன.குறித்த அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், இரா.சாணக்கியன், வைத்தியர் இ.ஸ்ரீநாத், போரதீவுப்பற்று  பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன், உள்ளிட்ட பிரதேச சபையின் உறுப்பினர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், பிரதேச செயலகம், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், சமூக நல அமைப்புக்களின் பிரதிநிதிகள் என அதிகளவிலான உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தேவைப்பாடுகள் தொடர்பாக தமது கருத்துக்களை தெரிவித்ததுடன், சில கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement