• Aug 09 2025

நாட்டின் சில இடங்களுக்கு மழை -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

Thansita / Aug 9th 2025, 7:23 am
image

மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.  

நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும்எனவும் அறிவித்துள்ளது

நீர்கொழும்பு முதல் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

மேலும்  நாடு முழுவதும் மணிக்கு 30-40 கி.மீ. காற்று வேகத்தில் வீசக்கூடும்.

மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக அக்கரைப்பற்று வரையிலான கடல் பகுதிகளில்இ காற்றின் வேகம் மணிக்கு 50-55 கி.மீ. வரை அதிகரிக்க்ககூடும்

இப்பகுதிகளில் கடல் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்

கல்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. வரை உயரலாம். 

ஆதலால் கடற்கரையோரப் பகுதிகளில் பயணம் செய்வோர் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது



நாட்டின் சில இடங்களுக்கு மழை -வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை மேல், சப்ரகமுவ மற்றும் வட மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் முன்னறிவித்துள்ளது.  நாட்டின் ஏனைய பகுதிகளில் பெரும்பாலும் மழையற்ற வானிலை நிலவும்எனவும் அறிவித்துள்ளதுநீர்கொழும்பு முதல் காலி வழியாக மாத்தறை வரையிலான கடற்கரையோரப் பகுதிகளில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும்  நாடு முழுவதும் மணிக்கு 30-40 கி.மீ. காற்று வேகத்தில் வீசக்கூடும்.மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை வழியாக அக்கரைப்பற்று வரையிலான கடல் பகுதிகளில்இ காற்றின் வேகம் மணிக்கு 50-55 கி.மீ. வரை அதிகரிக்க்ககூடும்இப்பகுதிகளில் கடல் சில நேரங்களில் கொந்தளிப்பாக இருக்கும்கல்பிட்டியிலிருந்து மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடல் பகுதிகளில், காற்றின் வேகம் மணிக்கு 50 கி.மீ. வரை உயரலாம். ஆதலால் கடற்கரையோரப் பகுதிகளில் பயணம் செய்வோர் மற்றும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement