• Apr 20 2026

வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் சீரான சேவைகள் இன்மையால் போராட்டம்!

Ziya / Mar 20th 2026, 5:23 pm
image

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை சீர் செய்யுமாறு கோரி நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.


வைத்தியசாலைக்கு தாதியர் இன்மை, 24 மணிநேர சேவையின்மை, நோயாளர் காவு வண்டியை காரைநகர் வைத்தியசாலைக்கு வழங்கியமை, வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் போன்றவற்றுக்கு தீர்வு கோரி இந்த போராட்டமானது நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


எனவே குறித்த போராட்டத்தில், அந்த வைத்தியசாலையை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் இணையுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை வைத்தியசாலையில் சீரான சேவைகள் இன்மையால் போராட்டம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சீரான சேவைகள் இல்லாத காரணத்தால் அவற்றை சீர் செய்யுமாறு கோரி நாளை (21) காலை 8.00 மணிக்கு வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.வைத்தியசாலைக்கு தாதியர் இன்மை, 24 மணிநேர சேவையின்மை, நோயாளர் காவு வண்டியை காரைநகர் வைத்தியசாலைக்கு வழங்கியமை, வைத்தியசாலையில் காணப்படுகின்ற குறைபாடுகள் போன்றவற்றுக்கு தீர்வு கோரி இந்த போராட்டமானது நோயாளர் நலன்புரி சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எனவே குறித்த போராட்டத்தில், அந்த வைத்தியசாலையை பயன்படுத்தும் அனைத்து தரப்பினரையும் இணையுமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement