பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை போன்றவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் பல அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவுக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சட்ட ஆதிக்கத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம்,
கண்டி சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சமூக செயற்பாட்டு ஒன்றியம், கண்டி பிரஜைகள் அமைப்பு, கண்டி புனருதய அமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.
இந்த போராட்டத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை மாணவி, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் போன்றவர்களின் உயிர்மாய்ப்புக்கு காரணமான விடயங்களை தடுப்பதில் அதிகாரிகள் பின் நின்றமை மற்றும் அதற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி, பதாதைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.
கல்வித்துறையில் இடம்பெறும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக கண்டியில் போராட்டம் பாடசாலைகள் மற்றும் மேலதிக வகுப்புகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள், பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதை போன்றவற்றுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் பல அமைப்புக்கள் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கண்டி ஜோர்ஜ் சில்வா பூங்காவுக்கு முன்பாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சட்ட ஆதிக்கத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம், கண்டி சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், சமூக செயற்பாட்டு ஒன்றியம், கண்டி பிரஜைகள் அமைப்பு, கண்டி புனருதய அமைப்பு, இலங்கை ஆசிரியர் சங்கம் என்பன இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.இந்த போராட்டத்தில் கொழும்பு கொட்டாஞ்சேனை மாணவி, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் போன்றவர்களின் உயிர்மாய்ப்புக்கு காரணமான விடயங்களை தடுப்பதில் அதிகாரிகள் பின் நின்றமை மற்றும் அதற்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் போன்ற விடயங்களை சுட்டிக்காட்டி, பதாதைகள் ஏந்தி கோஷங்கள் எழுப்பினர்.