• May 29 2025

அரசு வேலைவாய்ப்பில் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை- சப்வான் சல்மான் கோரிக்கை..!

Sharmi / May 28th 2025, 11:25 am
image

அரச வேலைவாய்ப்பில் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சப்வான் சல்மான்  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிழக்கு மாகாணத்தில், பட்டதாரி ஒருவர் தனது துறையில் வேலைவாய்ப்பு இல்லாததை காரணமாகக் கொண்டு, மாம்பழ வியாபாரியாக மாறியதாகவும், அந்த நிலையை வெளிக்காட்டும் வகையில் அரசாங்கத்திற்கு எதிராகப் பண்புத் தன்மையுடன் போராட்டமொன்றை மேற்கொண்டதாகவும் கடந்த 26ஆம் திகதி செய்திகள் வெளியாகியிருந்தன.

இது நாட்டின் கல்வி பெற்ற இளைஞர்கள் எதிர்கொண்டும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் மிகுந்த வேதனையான ஓர்  சம்பவமாகும்.

நாடளாவிய ரீதியில் அரசுப் பணியிடங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு முதன்மையாக பட்டதாரிகளுக்கே நியமனம் வழங்கப்படும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட அரச கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.

இந்த கோரிக்கை அரசாங்கத்தின் பூரண பொறுப்புணர்வின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும். பட்டதாரிகளின் கல்வித் தகுதியும், திறனும், நாட்டின் நிர்வாகத் துறையை சீர்ப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். 

இளைஞர்களின் கல்வியும் முயற்சியும் வீணாகாதிருக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஐக்கிய காங்கிரஸ், இந்நோக்கில் உறுதியாகக் குரல் கொடுத்து வருகின்றது. எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்களால் அல்லாமல், சீரான வேலைவாய்ப்பு திட்டங்களால் இளைஞர்கள் நம்பிக்கையுடன் உயிர் வாழும் சூழல் ஏற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.


அரசு வேலைவாய்ப்பில் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை- சப்வான் சல்மான் கோரிக்கை. அரச வேலைவாய்ப்பில் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் சப்வான் சல்மான்  அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கிழக்கு மாகாணத்தில், பட்டதாரி ஒருவர் தனது துறையில் வேலைவாய்ப்பு இல்லாததை காரணமாகக் கொண்டு, மாம்பழ வியாபாரியாக மாறியதாகவும், அந்த நிலையை வெளிக்காட்டும் வகையில் அரசாங்கத்திற்கு எதிராகப் பண்புத் தன்மையுடன் போராட்டமொன்றை மேற்கொண்டதாகவும் கடந்த 26ஆம் திகதி செய்திகள் வெளியாகியிருந்தன.இது நாட்டின் கல்வி பெற்ற இளைஞர்கள் எதிர்கொண்டும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் மிகுந்த வேதனையான ஓர்  சம்பவமாகும்.நாடளாவிய ரீதியில் அரசுப் பணியிடங்களில் காணப்படும் வெற்றிடங்களுக்கு முதன்மையாக பட்டதாரிகளுக்கே நியமனம் வழங்கப்படும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட அரச கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும்.இந்த கோரிக்கை அரசாங்கத்தின் பூரண பொறுப்புணர்வின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும். பட்டதாரிகளின் கல்வித் தகுதியும், திறனும், நாட்டின் நிர்வாகத் துறையை சீர்ப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இளைஞர்களின் கல்வியும் முயற்சியும் வீணாகாதிருக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையிலான அரசாங்கம் விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஐக்கிய காங்கிரஸ், இந்நோக்கில் உறுதியாகக் குரல் கொடுத்து வருகின்றது. எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்களால் அல்லாமல், சீரான வேலைவாய்ப்பு திட்டங்களால் இளைஞர்கள் நம்பிக்கையுடன் உயிர் வாழும் சூழல் ஏற்பட வேண்டியது அவசியமாகும் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement