• May 24 2026

அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு பயணமாகும் ஜனாதிபதி

Aathira / Sep 27th 2025, 10:54 am
image

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (27) ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.

ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் 30ஆம் தேதி வரை திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிய பேரரசரைச் சந்தித்து, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை முன்னிலைப்படுத்தி உச்சிமாநாட்டு சந்திப்பு ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், டோக்கியோவில் நடைபெறும் வணிக மன்றத்தில் பங்கெடுத்து, ஜப்பானிய முன்னணி வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு மத்தியில்  உரையாற்றவுள்ளார்.

இதுதவிர,  'எக்ஸ்போ 2025 ஒசாகா' கண்காட்சியிலும் பங்கேற்க உள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அண்மையில் அமெரிக்கா நியூயோர்க்குக்கு செய்த பயணம் முடிந்த பிறகு, அங்கிருந்து இந்த ஜப்பான் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.


 

அமெரிக்காவில் இருந்து ஜப்பானுக்கு பயணமாகும் ஜனாதிபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (27) ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள உள்ளார்.ஜப்பானிய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில், அவர் இன்று முதல் 30ஆம் தேதி வரை திகதி வரை ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த விஜயத்தின்போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜப்பானிய பேரரசரைச் சந்தித்து, பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்களை முன்னிலைப்படுத்தி உச்சிமாநாட்டு சந்திப்பு ஒன்றை நடத்தவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.மேலும், டோக்கியோவில் நடைபெறும் வணிக மன்றத்தில் பங்கெடுத்து, ஜப்பானிய முன்னணி வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் உயர்மட்ட பிரதிநிதிகளுக்கு மத்தியில்  உரையாற்றவுள்ளார்.இதுதவிர,  'எக்ஸ்போ 2025 ஒசாகா' கண்காட்சியிலும் பங்கேற்க உள்ளார்.ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அண்மையில் அமெரிக்கா நியூயோர்க்குக்கு செய்த பயணம் முடிந்த பிறகு, அங்கிருந்து இந்த ஜப்பான் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement