• May 10 2025

புதிய பாப்பரசருக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து

Chithra / May 9th 2025, 10:32 am
image


கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட்'க்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதன் படி 'கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்ட புனிதர் 14 ஆம் லியோ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். 

இப்பதவி மிகப்பெரிய பொறுப்பை உள்ளடக்கியது. விசுவாசிகளுக்கு வழிகாட்டும் உங்கள் செயல்களில் துணிவும் ஞானமும் இருக்க என வாழ்த்துகிறேன். 

உங்கள் தலைமையில் உலகமெங்கும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையும் ஆதரவும் கிடைக்கட்டும். இலங்கையின் சார்பில் உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்."  என்று அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தின் மூலம் புதிய பாப்பரசருக்கு வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.  

புதிய பாப்பரசருக்கு ஜனாதிபதி அனுர வாழ்த்து கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்ட அமெரிக்க கார்டினல் ரொபர்ட் பிரான்ஸிஸ் பிரீவோஸ்ட்'க்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் படி 'கத்தோலிக்க திருச்சபையின் புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்ட புனிதர் 14 ஆம் லியோ அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்பதவி மிகப்பெரிய பொறுப்பை உள்ளடக்கியது. விசுவாசிகளுக்கு வழிகாட்டும் உங்கள் செயல்களில் துணிவும் ஞானமும் இருக்க என வாழ்த்துகிறேன். உங்கள் தலைமையில் உலகமெங்கும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையும் ஆதரவும் கிடைக்கட்டும். இலங்கையின் சார்பில் உங்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகள்."  என்று அவர் தனது உத்தியோகபூர்வ முகப்புத்தக தளத்தின் மூலம் புதிய பாப்பரசருக்கு வாழ்த்து செய்தியை தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement