ஜப்பானின் பிரதான தீவானஹொன்ஷூவின் (Honshu) கடற்பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தேசிய நில அதிர்வு நிலையத்தின் தகவல்படி, நேற்று இரவு 7.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடியூட் ஆகக் பதிவாகியுள்ளதுடன், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
நிலநடுக்கம் உணரப்பட்ட போதிலும், இதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டமைப்புப் பாதிப்புகள்
குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
முக்கியமாக, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் நில அதிர்வு வலயத்தில் அமைந்துள்ள நாடாக இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் சற்று பதற்றம் நிலவியது.
ஜப்பானின் ஹோன்ஷு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கையா ஜப்பானின் பிரதான தீவானஹொன்ஷூவின் (Honshu) கடற்பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தேசிய நில அதிர்வு நிலையத்தின் தகவல்படி, நேற்று இரவு 7.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 மெக்னிடியூட் ஆகக் பதிவாகியுள்ளதுடன், கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.நிலநடுக்கம் உணரப்பட்ட போதிலும், இதனால் ஏற்பட்ட உயிர்ச் சேதங்கள் அல்லது கட்டமைப்புப் பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.முக்கியமாக, இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.ஜப்பான் நில அதிர்வு வலயத்தில் அமைந்துள்ள நாடாக இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம் என்றாலும், இந்த நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக இருந்ததால் பொதுமக்கள் மத்தியில் சற்று பதற்றம் நிலவியது.