புத்தளம் - உடப்பு கிராம கரையோரப் பகுதியில் பிளாஸ்ரிக், பொலித்தீன் தயாரிப்பு மூலப்பொருட்கள்
பெருமளவில் கரையொதுங்கியுள்ளன.
குறித்த பகுதி மீனவர்கள் இன்று (3) அதிகாலை கடற்கரைக்குச் சென்ற போது அதிகாலை தொடக்கம் பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் கரையொதுங்கிய வண்ணம் காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.
தற்போது வீசும் தென்மேல் பருவக்காற்றின் வேகத்தில் குறித்த மூலப்பொருட்கள் கரையொதுங்குகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது.
பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மூலப்பொருட்கள் மணி போன்ற வெள்ளை நிற வடிவில் கரையோரத்தின் பல பகுதிகளில் ஒதுங்கிக் காணப்படுகின்றது.
இவை மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை நச்சுப்பொருள்கள் என்றும் சிறுவர்கள் விளையாட்டாக இதனை எடுத்து பார்ப்பது ,விளையாடுவதற்காக எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் கரையொதுங்கும் பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள்- விளையாட்டுப் பொருள்களாக எடுக்காதீர்கள் - சிறுவர்களுக்கு எச்சரிக்கை புத்தளம் - உடப்பு கிராம கரையோரப் பகுதியில் பிளாஸ்ரிக், பொலித்தீன் தயாரிப்பு மூலப்பொருட்கள் பெருமளவில் கரையொதுங்கியுள்ளன. குறித்த பகுதி மீனவர்கள் இன்று (3) அதிகாலை கடற்கரைக்குச் சென்ற போது அதிகாலை தொடக்கம் பிளாஸ்ரிக் மூலப்பொருட்கள் கரையொதுங்கிய வண்ணம் காணப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர். தற்போது வீசும் தென்மேல் பருவக்காற்றின் வேகத்தில் குறித்த மூலப்பொருட்கள் கரையொதுங்குகின்றன என்று தெரிவிக்கப்படுகின்றது. பிளாஸ்ரிக் மற்றும் பொலித்தீன் மூலப்பொருட்கள் மணி போன்ற வெள்ளை நிற வடிவில் கரையோரத்தின் பல பகுதிகளில் ஒதுங்கிக் காணப்படுகின்றது. இவை மனிதனுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை நச்சுப்பொருள்கள் என்றும் சிறுவர்கள் விளையாட்டாக இதனை எடுத்து பார்ப்பது ,விளையாடுவதற்காக எடுத்துச் செல்வது மிகவும் ஆபத்தானவை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.