• Sep 14 2025

தரையில் கழன்று விழுந்த விமானத்தின் சக்கரம் ; 80 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கம்!

shanuja / Sep 13th 2025, 11:54 am
image

கண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 


குஜராத்தின் கண்ட்லாவில் இருந்து 80 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பைக்கு  புறப்பட்டவுடன் அதன் ஓடுபாதையில் சக்கரம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


உடனே இது குறித்து விமானிக்கு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையகம் தகவல் தெரிவித்தது. 


இருப்பினும் சில்லு கழன்று விழுந்த பதற்றத்துடன் பயணித்த விமானம்  மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.


அதனையடுத்து விமானத்தில் இருந்து அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 


விமானத்தின் சக்கரம் சுழன்று விழுந்தது தொடர்பாக விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தரையில் கழன்று விழுந்த விமானத்தின் சக்கரம் ; 80 பயணிகளும் பாதுகாப்பாக தரையிறக்கம் கண்ட்லா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. குஜராத்தின் கண்ட்லாவில் இருந்து 80 பயணிகளுடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் மும்பைக்கு  புறப்பட்டவுடன் அதன் ஓடுபாதையில் சக்கரம் ஒன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.உடனே இது குறித்து விமானிக்கு, விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையகம் தகவல் தெரிவித்தது. இருப்பினும் சில்லு கழன்று விழுந்த பதற்றத்துடன் பயணித்த விமானம்  மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.அதனையடுத்து விமானத்தில் இருந்து அனைத்துப் பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். விமானத்தின் சக்கரம் சுழன்று விழுந்தது தொடர்பாக விசாரணைக்கு  உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement