• Apr 30 2026

தரையிறங்க முயன்றபோது விழுந்து நொருங்கிய விமானம்; மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உட்பட 6பேர் உயிரிழப்பு!

shanu / Jan 28th 2026, 4:59 pm
image

இந்தியாவின்  மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.


புனே மாவட்டம் பாராமதி பகுதியில் இன்று புதன்கிழமை (ஜன 28) காலை 8.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது அஜித் பவார் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.


குறித்த விமானத்தில் அஜித் பவார் மற்றும் அவரது பாதுகாவலர்கள் உட்பட மொத்தம் 4 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 


விபத்தில் சிக்கிய விமானம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளது. விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. 


விமானம் விழுந்து நொருங்கியதும் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் துணைமுதலமைச்சருடன் விமானத்தில் பயணித்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தீயணைப்பு வாகனங்களும் பொலிஸாரும் அதிகாரிகளும் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

தரையிறங்க முயன்றபோது விழுந்து நொருங்கிய விமானம்; மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சர் உட்பட 6பேர் உயிரிழப்பு இந்தியாவின்  மகாராஷ்டிர மாநில துணை முதலமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்.புனே மாவட்டம் பாராமதி பகுதியில் இன்று புதன்கிழமை (ஜன 28) காலை 8.45 மணிக்கு தரையிறங்க முயன்றபோது அஜித் பவார் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியுள்ளது.குறித்த விமானத்தில் அஜித் பவார் மற்றும் அவரது பாதுகாவலர்கள் உட்பட மொத்தம் 4 பேர் இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விபத்தில் சிக்கிய விமானம் முழுவதுமாக தீப்பற்றி எரிந்துள்ளது. விமான விபத்தில் மகாராஷ்டிர மாநில துணை துணை முதலமைச்சர் அஜித் பவார் உயிரிழந்ததாக விமானத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. விமானம் விழுந்து நொருங்கியதும் விமானம் முழுவதும் தீப்பற்றி எரிந்துள்ளது. இதனால் துணைமுதலமைச்சருடன் விமானத்தில் பயணித்த அனைவரும் விபத்தில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வாகனங்களும் பொலிஸாரும் அதிகாரிகளும் குவிக்கப்பட்டு மீட்புப் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement