• Mar 11 2026

திடீரென இடிந்து விழுந்த மின்கம்பம்; நொடிப்பொழுதில் உயிர்தப்பிய மாணவன்!

shanu / Jan 28th 2026, 4:55 pm
image

வீதியிலிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் நொடிப்பொழுதில் உயிர்தப்பியுள்ளான். 


இந்தச் சம்பவம் கர்னூல், அசோக் நகரத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மாணவன் பாடசாலைக்குச் செல்வதற்காக நடந்து சென்றுள்ளான். 


வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து 

விழுந்தது. 


மின்கம்பம் விழுந்ததுடன் மின்சார கம்பிகள் சில அங்குலங்கள் தொலைவில் விழுந்தன். மின்கம்பம் விழுவதை நொடிப்பொழுதில் அவதானித்த மாணவன் சட்டென்று திரும்பி ஓட்டமெடுத்தான். 


மின்கம்பம் மாணவன் மீது விழவில்லை. எனினும் கம்பிகள் அவன் மீது விழும் வகையில் மாணவன் ஓடும் வரையிலும் விழுந்துள்ளது. 


எனினும் மாணவன் உயிரைக் கையில் பிடித்தவாறு வேகமாக ஓடினான். இதனால் ஓர் நொடிப்பொழுதில் அவன் உயிர்தப்பியுள்ளான். 

 

மின்கம்பம் விழுந்து உயிரைக் கையில் பிடித்தவாறு மாணவன் ஓடும் காட்சி வெளிவந்து பதறவைத்துள்ளது. 


இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

திடீரென இடிந்து விழுந்த மின்கம்பம்; நொடிப்பொழுதில் உயிர்தப்பிய மாணவன் வீதியிலிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்ததில் மாணவன் ஒருவன் நொடிப்பொழுதில் உயிர்தப்பியுள்ளான். இந்தச் சம்பவம் கர்னூல், அசோக் நகரத்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள மாணவன் பாடசாலைக்குச் செல்வதற்காக நடந்து சென்றுள்ளான். வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த மின்கம்பம் திடீரென சரிந்து விழுந்தது. மின்கம்பம் விழுந்ததுடன் மின்சார கம்பிகள் சில அங்குலங்கள் தொலைவில் விழுந்தன். மின்கம்பம் விழுவதை நொடிப்பொழுதில் அவதானித்த மாணவன் சட்டென்று திரும்பி ஓட்டமெடுத்தான். மின்கம்பம் மாணவன் மீது விழவில்லை. எனினும் கம்பிகள் அவன் மீது விழும் வகையில் மாணவன் ஓடும் வரையிலும் விழுந்துள்ளது. எனினும் மாணவன் உயிரைக் கையில் பிடித்தவாறு வேகமாக ஓடினான். இதனால் ஓர் நொடிப்பொழுதில் அவன் உயிர்தப்பியுள்ளான்.  மின்கம்பம் விழுந்து உயிரைக் கையில் பிடித்தவாறு மாணவன் ஓடும் காட்சி வெளிவந்து பதறவைத்துள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement