• Apr 27 2026

அரசின் அனுபவமின்மையால் நாசமாகும் மக்களின் பணம்! - ஹர்ஷண எம்.பி. சாடல்

Chithra / Apr 27th 2026, 8:34 am
image

"திறைசேரியில் உள்ள மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க முடியாத அளவுக்குத் தற்போதைய அரசு நிர்வாகத் திறமையற்று இருக்கின்றது. பல மாதங்களாக இந்த நிதி மோசடியை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருப்பது ஒரு பாரிய சதியாகும்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.


இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,


"இந்த அரசுக்கு நாட்டை வழிநடத்தும் அனுபவம் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எச்சரித்தோம். ஆனால், வெறுப்புணர்வைப் பரப்பி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இவர்கள், இப்போது மக்களின் வரிப்பணத்தை நாசமாக்கியுள்ளனர்.


இந்தத் திறைசேரிப் பணம் என்பது பெலவத்தையிலிருந்து (ஜே.வி.பி தலைமையகம்) கொண்டுவரப்பட்டதோ அல்லது அவர்களின் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்பட்டதோ அல்ல. இது இந்த நாட்டு மக்களின் இரத்தம் கலந்த வரிப்பணம். இதற்கு யார் பொறுப்பேற்பது?


நாடாளுமன்றம் என்பது நாட்டின் நிதி தொடர்பான முழுமையான பொறுப்புள்ள நிறுவனமாகும். ஆனால், பல மாதங்களாக இந்த மோசடித் தகவலை அரசு இரகசியமாக வைத்திருந்தது ஏன்?நாடாளுமன்றத்துக்கோ அல்லது நிதி தொடர்பான குழுவுக்கோ இது தெரியப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதிக்கும் இது தெரிந்தே மறைக்கப்பட்டதா?" 


இழந்த பணத்தை மீண்டும் மீட்போம் என்று அரசு கூறுவது மற்றொரு பொய் என்று சாடிய அவர், "உகாண்டாவில் உள்ள பணத்தை மீட்டு வருவோம் என்று சொன்னவர்களால் இதையும் செய்ய முடியாது. இறுதியில், நிலக்கரி மோசடியைப் போலவே இந்த இழப்பையும் ஈடுகட்ட மின்சாரக் கட்டணம் அல்லது எரிபொருள் விலையை உயர்த்தி மக்கள் மீதே வரிச்சுமையைச் சுமத்துவார்கள்" என்றும் தெரிவித்தார்.


அரசின் அனுபவமின்மையால் நாசமாகும் மக்களின் பணம் - ஹர்ஷண எம்.பி. சாடல் "திறைசேரியில் உள்ள மக்களின் வரிப்பணத்தைப் பாதுகாக்க முடியாத அளவுக்குத் தற்போதைய அரசு நிர்வாகத் திறமையற்று இருக்கின்றது. பல மாதங்களாக இந்த நிதி மோசடியை நாடாளுமன்றத்துக்குத் தெரிவிக்காமல் மறைத்து வைத்திருப்பது ஒரு பாரிய சதியாகும்" என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா தெரிவித்தார்.இது குறித்து ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,"இந்த அரசுக்கு நாட்டை வழிநடத்தும் அனுபவம் இல்லை என்பதை நாம் ஏற்கனவே எச்சரித்தோம். ஆனால், வெறுப்புணர்வைப் பரப்பி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த இவர்கள், இப்போது மக்களின் வரிப்பணத்தை நாசமாக்கியுள்ளனர்.இந்தத் திறைசேரிப் பணம் என்பது பெலவத்தையிலிருந்து (ஜே.வி.பி தலைமையகம்) கொண்டுவரப்பட்டதோ அல்லது அவர்களின் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்பட்டதோ அல்ல. இது இந்த நாட்டு மக்களின் இரத்தம் கலந்த வரிப்பணம். இதற்கு யார் பொறுப்பேற்பதுநாடாளுமன்றம் என்பது நாட்டின் நிதி தொடர்பான முழுமையான பொறுப்புள்ள நிறுவனமாகும். ஆனால், பல மாதங்களாக இந்த மோசடித் தகவலை அரசு இரகசியமாக வைத்திருந்தது ஏன்நாடாளுமன்றத்துக்கோ அல்லது நிதி தொடர்பான குழுவுக்கோ இது தெரியப்படுத்தப்படவில்லை. ஜனாதிபதிக்கும் இது தெரிந்தே மறைக்கப்பட்டதா" இழந்த பணத்தை மீண்டும் மீட்போம் என்று அரசு கூறுவது மற்றொரு பொய் என்று சாடிய அவர், "உகாண்டாவில் உள்ள பணத்தை மீட்டு வருவோம் என்று சொன்னவர்களால் இதையும் செய்ய முடியாது. இறுதியில், நிலக்கரி மோசடியைப் போலவே இந்த இழப்பையும் ஈடுகட்ட மின்சாரக் கட்டணம் அல்லது எரிபொருள் விலையை உயர்த்தி மக்கள் மீதே வரிச்சுமையைச் சுமத்துவார்கள்" என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement