• Nov 05 2026

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள்! பொலிஸார் குவிப்பு - நடந்தது என்ன?

Chithra / Nov 2nd 2026, 12:18 pm
image


மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் பண்ணையாளர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று (02) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.


இதன்போது, பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், தமது ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.


மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் தரப்பினரால், அங்குள்ள பண்ணையாளர்களும் அவர்களது கால்நடைகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.


இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகள்  உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், பண்ணையாளர்களும் பொதுமக்களுமாக  பலர்  கலந்துகொண்டுள்ளனர்.


இந்நிலையில் குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

 

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்ட மக்கள் பொலிஸார் குவிப்பு - நடந்தது என்ன மட்டக்களப்பு – மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் பண்ணையாளர்களுக்கு நீதி வழங்கக் கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று (02) பாரிய போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.இதன்போது, பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு வழங்க வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், தமது ஆதங்கத்தையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.மயிலத்தமடு மற்றும் மாதவனை பகுதிகளில் சட்டவிரோதமாகக் குடியேறியுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்படும் தரப்பினரால், அங்குள்ள பண்ணையாளர்களும் அவர்களது கால்நடைகளும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகி வருவதாகப் பண்ணையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிநேசன், சிறிநாத், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேலன் சுவாமிகள்  உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும், பண்ணையாளர்களும் பொதுமக்களுமாக  பலர்  கலந்துகொண்டுள்ளனர்.இந்நிலையில் குறித்த பகுதியில் பெருமளவு பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement

Advertisement