• Apr 15 2026

நோன்பு பெருநாளுக்கு வீடு திருப்பியவர்கள் கப்பல் விபத்தில் பலி

Aathira / Mar 21st 2026, 12:42 pm
image

டாக்காவின் சதர்காட் முனையத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயணிகள் கப்பல் விபத்தில், இரு பயணிகள் இரு கப்பல்களின் முனைகளுக்கு இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. 

இது தொடர்பாக வெளியான காணொளியில்,அதிக பயணிகள் ஒரு பெரிய கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாறும் போது, இருவர் சிக்கி நசுங்கியிருப்பது தெளிவாக தெரிய வருகிறது. 

இதன்போது, அங்கிருந்த சக பயணிகள் அவர்களை மீட்க பெரிதும் பாடுபட்டனர். ஆனாலும் அவர்களை மீட்க முடியவில்லை. 

இறுதியில் ஒரு கப்பல் அங்கிருந்து நகரும் போது அதற்கு இடையில் சிக்கி இருந்த இருவரில் ஒருவர் இடுப்பிற்கு கீழே கால்கள் முற்றிலுமாக நசுக்கப்பட்டு உயிரிழந்தார்.

மற்றொருவர் குறித்த பயணிகள் கப்பலில் முற்றிலுமாக நசுங்கி இறுதியில் கடலுக்குள் அவரது உடல் துண்டு துண்டாக வீழ்த்தப்பட்டது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நோன்பு பெருநாளை முன்னிட்டு தங்களுடைய குடும்பத்தினரை பார்க்க சென்ற நிலையிலையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சை உலுக்கியுள்ளது 

நோன்பு பெருநாளுக்கு வீடு திருப்பியவர்கள் கப்பல் விபத்தில் பலி டாக்காவின் சதர்காட் முனையத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பயணிகள் கப்பல் விபத்தில், இரு பயணிகள் இரு கப்பல்களின் முனைகளுக்கு இடையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் காணொளி சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி உள்ளது. இது தொடர்பாக வெளியான காணொளியில்,அதிக பயணிகள் ஒரு பெரிய கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாறும் போது, இருவர் சிக்கி நசுங்கியிருப்பது தெளிவாக தெரிய வருகிறது. இதன்போது, அங்கிருந்த சக பயணிகள் அவர்களை மீட்க பெரிதும் பாடுபட்டனர். ஆனாலும் அவர்களை மீட்க முடியவில்லை. இறுதியில் ஒரு கப்பல் அங்கிருந்து நகரும் போது அதற்கு இடையில் சிக்கி இருந்த இருவரில் ஒருவர் இடுப்பிற்கு கீழே கால்கள் முற்றிலுமாக நசுக்கப்பட்டு உயிரிழந்தார்.மற்றொருவர் குறித்த பயணிகள் கப்பலில் முற்றிலுமாக நசுங்கி இறுதியில் கடலுக்குள் அவரது உடல் துண்டு துண்டாக வீழ்த்தப்பட்டது.இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் நோன்பு பெருநாளை முன்னிட்டு தங்களுடைய குடும்பத்தினரை பார்க்க சென்ற நிலையிலையே இவ்வாறு உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.இந்த காணொளி தற்போது இணையத்தில் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சை உலுக்கியுள்ளது 

Advertisement

Advertisement

Advertisement