• Apr 15 2026

சட்டவிரோத எரிபொருள் கடத்தல்: மூவர் கைது

Aathira / Mar 21st 2026, 12:16 pm
image

சட்டவிரோதமாக எரிபொருளை கையிருப்பில் வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் தொடர்பான மூன்று தனித்தனி சம்பவங்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (20) மாலை ஹங்வெல்ல, களுத்துறை வடக்கு மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது இக்கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹங்வெல்ல – எமுல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அனுமதிப்பத்திரமின்றி 645 லீற்றர் டீசல் வைத்திருந்த 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல், களுத்துறை வடக்கு – போசிரிபுர பகுதியில், 35.5 லீற்றர் பெட்ரோல் விற்பனைக்காக அனுமதியின்றி வைத்திருந்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், கொட்டாஞ்சேனை – புளுமெண்டல் பகுதியில், லொறி ஒன்றில் 2000 லீற்றர் டீசல் (10 பீப்பாய்கள்) அனுமதியின்றி கடத்திய 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்தந்த பொலிஸ் நிலையங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

சட்டவிரோத எரிபொருள் கடத்தல்: மூவர் கைது சட்டவிரோதமாக எரிபொருளை கையிருப்பில் வைத்தல், விற்பனை செய்தல் மற்றும் கடத்தல் தொடர்பான மூன்று தனித்தனி சம்பவங்களில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (20) மாலை ஹங்வெல்ல, களுத்துறை வடக்கு மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனைகளின் போது இக்கைதுகள் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.ஹங்வெல்ல – எமுல்கம பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், அனுமதிப்பத்திரமின்றி 645 லீற்றர் டீசல் வைத்திருந்த 31 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.அதேபோல், களுத்துறை வடக்கு – போசிரிபுர பகுதியில், 35.5 லீற்றர் பெட்ரோல் விற்பனைக்காக அனுமதியின்றி வைத்திருந்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், கொட்டாஞ்சேனை – புளுமெண்டல் பகுதியில், லொறி ஒன்றில் 2000 லீற்றர் டீசல் (10 பீப்பாய்கள்) அனுமதியின்றி கடத்திய 25 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அந்தந்த பொலிஸ் நிலையங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement