• Jul 15 2026

அரச அதிகாரிகளுக்கான விடுமுறை விதிகளில் திருத்தம்; அமைச்சரவை ஒப்புதல்

dorin / Jul 15th 2026, 10:43 am
image

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும், அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட 2021 ஜூன் 25ஆம் திகதியிட்ட 12/2021 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையை மேலும் திருத்தி புதிய விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2026 ஜூன் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த புதிய விதியின்படி, உள்ளூராட்சி மன்றமொன்றின் பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும் அதிகாரி ஒருவருக்கு, முன்னர் இருந்தவாறு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள அல்லது தனது விருப்பத்திற்கமைய அந்தப் பதவிக் காலத்திற்குள் சம்பளமற்ற விடுமுறையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தத் திருத்தமானது அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.


அரச அதிகாரிகளுக்கான விடுமுறை விதிகளில் திருத்தம்; அமைச்சரவை ஒப்புதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும், அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.அதற்கமைய, நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தின் 2:3:4 உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட 2021 ஜூன் 25ஆம் திகதியிட்ட 12/2021 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையை மேலும் திருத்தி புதிய விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.2026 ஜூன் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXII ஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.அந்த புதிய விதியின்படி, உள்ளூராட்சி மன்றமொன்றின் பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும் அதிகாரி ஒருவருக்கு, முன்னர் இருந்தவாறு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள அல்லது தனது விருப்பத்திற்கமைய அந்தப் பதவிக் காலத்திற்குள் சம்பளமற்ற விடுமுறையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.இந்தத் திருத்தமானது அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement