• Aug 16 2025

கோபுரத்திலிருந்து எழுந்தருளி வந்த அருணகிரிநாதர்- நல்லூரானின் 18 ஆம் நாள் திருவிழாவில் திரண்ட மக்கள்!

shanuja / Aug 15th 2025, 10:14 pm
image

நல்லூர்க் கந்தனின் 18ஆம் நாள் உற்சவத்தின் மாலை பூசைகள் நிறைவுற்று அருணகிரிநாதர் உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. 



வழமை போன்று திருக்கோவிலில் இருந்து  எழுந்தருளி அருணகிரிநாதர் வலம் வரும் காட்சி பக்தர்களுக்கு அருட்காட்சியாக அமைந்துள்ளது. 


வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று இடம்பெறுகின்றது. 


மாலை நேரப் பூசைகள் நிறைவடைந்ததும் அருணகிரிநாதர் உற்சவம் பக்தர்கள் புடைசூழ ஆரம்பமானது. 


திருவண்ணாமலைக் கோபுரம் போன்றதான ஒரு தரிசனத்தை நல்லூர் தெற்குக் கோபுரத்தில் கண்டு கொள்ளும் வகையில் இன்றைய திருவிழா அமைந்துள்ளது. 

 

நல்லூர்க் கந்தனின் தெற்குக் கோபுரத்திலிருந்து அருணகிரிநாதர் கிளி உருவாய் மாலை அரங்காரத்துடன் ஆலயத்தை வந்தடையும் காட்சி பக்தர்களுக்கு மெருகூட்டுவதாக அமைந்தது. 


வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிளி உருவாய் அருணகிரிநாதர் வலம் வந்துள்ளார். 


நல்லூரானைப் போற்றிப்பாடிய அருணகிரிநாதரின் உற்சவம், நல்லூர் மஹோற்சவத்தில் ஒரு திருவிழாவாக இடம்பெறுவது வழக்கமாகும். 


அந்த வகையில் இன்றைய 18ஆம் நாள் உற்சவத்தில் இடம்பெறும் அருணகிரிநாதர் உற்சவத்தைக் காண மக்கள் அரோகரா கோஷங்களை எழுப்பி  திரண்ர காட்சி பூரிக்க வைத்துள்ளது.

கோபுரத்திலிருந்து எழுந்தருளி வந்த அருணகிரிநாதர்- நல்லூரானின் 18 ஆம் நாள் திருவிழாவில் திரண்ட மக்கள் நல்லூர்க் கந்தனின் 18ஆம் நாள் உற்சவத்தின் மாலை பூசைகள் நிறைவுற்று அருணகிரிநாதர் உற்சவம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. வழமை போன்று திருக்கோவிலில் இருந்து  எழுந்தருளி அருணகிரிநாதர் வலம் வரும் காட்சி பக்தர்களுக்கு அருட்காட்சியாக அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் 18ஆம் நாள் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று இடம்பெறுகின்றது. மாலை நேரப் பூசைகள் நிறைவடைந்ததும் அருணகிரிநாதர் உற்சவம் பக்தர்கள் புடைசூழ ஆரம்பமானது. திருவண்ணாமலைக் கோபுரம் போன்றதான ஒரு தரிசனத்தை நல்லூர் தெற்குக் கோபுரத்தில் கண்டு கொள்ளும் வகையில் இன்றைய திருவிழா அமைந்துள்ளது.  நல்லூர்க் கந்தனின் தெற்குக் கோபுரத்திலிருந்து அருணகிரிநாதர் கிளி உருவாய் மாலை அரங்காரத்துடன் ஆலயத்தை வந்தடையும் காட்சி பக்தர்களுக்கு மெருகூட்டுவதாக அமைந்தது. வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கிளி உருவாய் அருணகிரிநாதர் வலம் வந்துள்ளார். நல்லூரானைப் போற்றிப்பாடிய அருணகிரிநாதரின் உற்சவம், நல்லூர் மஹோற்சவத்தில் ஒரு திருவிழாவாக இடம்பெறுவது வழக்கமாகும். அந்த வகையில் இன்றைய 18ஆம் நாள் உற்சவத்தில் இடம்பெறும் அருணகிரிநாதர் உற்சவத்தைக் காண மக்கள் அரோகரா கோஷங்களை எழுப்பி  திரண்ர காட்சி பூரிக்க வைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement