கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குக்பட்ட காக்காமுனையையும் கோழி முட்டை கரச்சையையும் இணைக்கும் வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த இவ் வீதி சுமார் 15 வருட காலமாக உடைந்து பள்ளமும் படுகுழியுமாக காணப்படுவதுடன் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனால் இதன் மூலம் பயணிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
நாளாந்தம் இவ் வீதியை பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள்,வியாபாரிகள்,பொது மக்கள் என பயன்படுத்தி வருகின்றனர்.
இது தொடர்பில் பல முறை உரிய அதிகாரிகளிடம் குறித்த வீதியை புனரமைக்க கோரி எழுத்து மூலமாக கடிதங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் புனரமைக்கப்படவில்லை.
தற்போது மழை காலம் என்பதால் நீர் தேங்கி நிற்பதனால் போக்குவரத்துக்கு தடையாகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா பிரதேச சபை,வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாகவோ இவ் வீதியை செப்பனிட்டு தருமாறும் கோரிக்கையை முன்வைப்பதுடன் தற்போதைய அரசாங்கத்திடமும் கோரிக்கையாக முன்வைக்கிறோம் எனவும் தெரிவிக்கின்றனர்.
கடந்த காலங்களில் இவ் வீதியை குப்பை கூலங்களை வைத்து மூடியும் அபிவிருத்தி என்ற போர்வையில் நாசமாக்கினர்.
எனவே உரிய வீதியை விரைவாக புனரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.
கிண்ணியா காக்காமுனை கோழி முட்டை கரச்சை வீதியை புனரமைக்குமாறு மக்கள் கோரிக்கை கிண்ணியா பிரதேச சபை எல்லைக்குக்பட்ட காக்காமுனையையும் கோழி முட்டை கரச்சையையும் இணைக்கும் வீதியானது மிக நீண்ட காலமாக புனரமைக்கப்படாது குண்டும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்து செய்ய முடியாத நிலை காணப்படுவதாக அப் பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.குறித்த இவ் வீதி சுமார் 15 வருட காலமாக உடைந்து பள்ளமும் படுகுழியுமாக காணப்படுவதுடன் மழை காலங்களில் நீர் தேங்கி நிற்பதனால் இதன் மூலம் பயணிப்பதில் சிரமம் ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். நாளாந்தம் இவ் வீதியை பாடசாலை மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள்,வியாபாரிகள்,பொது மக்கள் என பயன்படுத்தி வருகின்றனர். இது தொடர்பில் பல முறை உரிய அதிகாரிகளிடம் குறித்த வீதியை புனரமைக்க கோரி எழுத்து மூலமாக கடிதங்கள் வழங்கப்பட்ட போதிலும் இன்னும் புனரமைக்கப்படவில்லை. தற்போது மழை காலம் என்பதால் நீர் தேங்கி நிற்பதனால் போக்குவரத்துக்கு தடையாகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர். கிண்ணியா பிரதேச சபை,வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாகவோ இவ் வீதியை செப்பனிட்டு தருமாறும் கோரிக்கையை முன்வைப்பதுடன் தற்போதைய அரசாங்கத்திடமும் கோரிக்கையாக முன்வைக்கிறோம் எனவும் தெரிவிக்கின்றனர்.கடந்த காலங்களில் இவ் வீதியை குப்பை கூலங்களை வைத்து மூடியும் அபிவிருத்தி என்ற போர்வையில் நாசமாக்கினர்.எனவே உரிய வீதியை விரைவாக புனரமைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.