மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து மூதூர் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள், பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பாரம்பரிய கடல் எல்லைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, இன்று அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
மூதூர் தஹ்வா நகர் கடற்கரை பள்ளிவாசல் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் செய்து முதலில் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை சமர்ப்பித்தனர்.
பின்னர் மூதூர் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது. மீனவர் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை தயாரித்து, அதை மூதூர் பிரதேச உதவி செயலாளரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினர்.
மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,
கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.
தனியார் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்படும் கடல் எல்லைகள்; மூதூர் மீனவர்கள் போராட்டம் மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என தெரிவித்து மூதூர் மீனவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள், பல தலைமுறைகளாக தாங்கள் தொழில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த பாரம்பரிய கடல் எல்லைகள் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, இன்று அமைதியான முறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.மூதூர் தஹ்வா நகர் கடற்கரை பள்ளிவாசல் பகுதியிலிருந்து தொடங்கிய இந்தப் பேரணி, முக்கிய வீதிகள் வழியாக நடைபயணம் செய்து முதலில் மூதூர் பிரதேச சபை தவிசாளரிடம் கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை சமர்ப்பித்தனர். பின்னர் மூதூர் பிரதேச செயலகத்தை சென்றடைந்தது. மீனவர் பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை உள்ளடக்கிய மனுவை தயாரித்து, அதை மூதூர் பிரதேச உதவி செயலாளரிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினர்.மீனவர்கள் பயன்படுத்தி வரும் பாரம்பரிய கடல் எல்லைகளை தனியார் நிறுவனங்களுக்கு வழங்கும் நடவடிக்கையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்,கடல் வளங்களைப் பாதுகாக்க அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும், மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள், மீனவர்கள் உள்ளிட்ட பலரும் இணைந்திருந்தனர்.