பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமது அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இங்கு தெரிவித்தார்.
பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கட்டாயம் அமைச்சர் பிமல் அறிவிப்பு பாடசாலை வேன்களுக்கு சி.சி.டி.வி கெமரா அமைப்புகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். போக்குவரத்தின் போது பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாகவும், எதிர்காலத்தில் அதனை குறைத்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளைத் தமது அரசாங்கம் முன்னெடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார். அத்துடன், பாடசாலை போக்குவரத்து சேவைகள் மற்றும் அலுவலக போக்குவரத்து சேவைகளுக்கான வழிகாட்டல் நெறிமுறைகளை ஜனவரி மாதம் முதல் அறிமுகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் இங்கு தெரிவித்தார்.