அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வோர் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
முன்னதாக, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் 350 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
இந்தநிலையில், குறித்த மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனம் தொடர்பில், அதிகார சபையிடம் முறையிடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அதிக விலைக்கு மருந்து விற்றால் சட்ட நடவடிக்கை - முறையிடுமாறு கோரிக்கை அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட அதிக விலைக்கு மருந்துகளை விற்பனை செய்வோர் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. முன்னதாக, தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையால் 350 மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டு அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்தநிலையில், குறித்த மருந்துகளை அதிக விலைக்கு விற்பனை செய்யும் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனம் தொடர்பில், அதிகார சபையிடம் முறையிடுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.