• Apr 15 2026

உச்சம் தொட்ட சர்வதேச மசகு எண்ணெய் விலை - தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி

Chithra / Mar 16th 2026, 10:26 am
image


சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்யின் விலை 03 சதவீதத்தால் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 106.50 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.


அதேபோல், டபிள்யூ.டி.ஐ (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98 அமெரிக்க டொலராக உள்ளது.

 

இதேவேளை சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில்  தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.


அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,012 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.


அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 80.01 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

உச்சம் தொட்ட சர்வதேச மசகு எண்ணெய் விலை - தங்கம், வெள்ளி விலை வீழ்ச்சி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய்யின் விலை 03 சதவீதத்தால் அதிகரித்து, பீப்பாய் ஒன்றின் விலை 106.50 அமெரிக்க டொலராகப் பதிவாகியுள்ளது.அதேபோல், டபிள்யூ.டி.ஐ (WTI) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 98 அமெரிக்க டொலராக உள்ளது. இதேவேளை சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலுக்கு மத்தியில்  தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று (16) வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,012 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 80.01 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement