• Apr 20 2026

டிட்வா சூறாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆராய நாடாளுமன்ற விசேட குழு

Chithra / Mar 5th 2026, 10:50 am
image

 

டிட்வா சூறாவளியை எதிர்கொள்வதில் காணப்பட்ட போதிய முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை குறைபாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்க விசேட நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

பிரசன்ன குணசேன, என்டன் ஜெயக்கொடி, அருண ஜயசேகர, அனுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், அனுஷ்க திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாப்பலகம மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவானது சூறாவளி பாதிப்புகள் மற்றும் அரச பொறிமுறையின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

டிட்வா சூறாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆராய நாடாளுமன்ற விசேட குழு  டிட்வா சூறாவளியை எதிர்கொள்வதில் காணப்பட்ட போதிய முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை குறைபாடுகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைகளை வழங்க விசேட நாடாளுமன்றக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக்குழுவில் பின்வரும் உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.பிரசன்ன குணசேன, என்டன் ஜெயக்கொடி, அருண ஜயசேகர, அனுராத ஜயரத்ன, ஹெக்டர் அப்புஹாமி, ரோஹிணி விஜேரத்ன, எம்.கே.எம்.அஸ்லம், அனுஷ்க திலகரத்ன, கந்தசாமி பிரபு, ருவன் மாப்பலகம மற்றும் பத்மநாதன் சத்தியலிங்கம் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.இக்குழுவானது சூறாவளி பாதிப்புகள் மற்றும் அரச பொறிமுறையின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து தனது அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement