• May 01 2025

கடந்த 10 ஆண்டுகளில் இரு அரசாங்கங்களின் நாடாளுமன்ற செலவினங்கள்! அநுர எடுத்த அதிரடி

Chithra / Apr 20th 2025, 8:20 am
image


வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால், கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு அரசாங்கங்களினால் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

இது தொடர்பாக அவசரக் கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏற்கனவே கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் செலவினப் பற்றாக்குறை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் காரணமாகச் சபாநாயகர் திருப்தி அடையாமையினாலும், 

கடந்த 10 வருடங்களில் பல தனியார் நிறுவனங்கள் நாடாளுமன்றத்தில் கணக்காய்வை நடத்தி வந்திருந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

அதற்கிணங்க, நாடாளுமன்றத்தில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இதனிடையே தற்போது வெற்றிடமாகியுள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் இரு அரசாங்கங்களின் நாடாளுமன்ற செலவினங்கள் அநுர எடுத்த அதிரடி வெளிப்படைத்தன்மை இல்லாத காரணத்தினால், கடந்த 10 ஆண்டுகளில் இரண்டு அரசாங்கங்களினால் நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் தொடர்பில் கணக்காய்வு நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக அவசரக் கணக்காய்வு அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஏற்கனவே கணக்காய்வாளர் நாயகத்திற்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த 8 மற்றும் 9 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் செலவினப் பற்றாக்குறை தொடர்பாக எழுந்த பிரச்சினைகள் காரணமாகச் சபாநாயகர் திருப்தி அடையாமையினாலும், கடந்த 10 வருடங்களில் பல தனியார் நிறுவனங்கள் நாடாளுமன்றத்தில் கணக்காய்வை நடத்தி வந்திருந்ததாலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதற்கிணங்க, நாடாளுமன்றத்தில் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருவதாகவும் சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தற்போது வெற்றிடமாகியுள்ள கணக்காய்வாளர் நாயகம் பதவிக்குப் பொருத்தமான ஒருவரை நியமிப்பதற்காக அரசியலமைப்பு சபை எதிர்வரும் 22 ஆம் திகதி கூடவுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement