• May 29 2026

அனுராதபுரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 5,000க்கும் அதிகமான சிறுவர்கள்

Chithra / May 28th 2026, 1:41 pm
image

அனுராதபுரம் மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட 5,780 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.


அனுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில், அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் டி.பி. சுகதபால இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.


பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள சிறுவர்களில் 4,248 பேர் மிக அதிகமான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள (High-risk) பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள சிறுவர்கள் அதிகளவில் தம்புத்தேகம பகுதியிலிருந்தே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


அனுராதபுரம் மாவட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய பிரதி பொலிஸ்மா  அதிபர், அதற்கான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை முன்வைத்தார்.


அதன்படி கடந்த ஆண்டில் மாத்திரம் 36 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியிருந்தன. நடப்பு ஆண்டில், கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 24 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.


பல குடும்பங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை உறவினர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.


இவ்வாறு தற்காலிகப் பராமரிப்பில் விடப்படும் பிள்ளைகள் பல சந்தர்ப்பங்களில் போதிய கவனிப்பின்றி அலட்சியப்படுத்தப்படுவதாகவும், அவர்களுக்குத் தேவையான முறையான அவதானமும் பாதுகாப்பும் வழங்கப்படத் தவறுவதே இந்நிலைமைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்தச் சிறுவர்கள் குறித்து காவல்துறை உன்னிப்பான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.


அனுராதபுரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் 5,000க்கும் அதிகமான சிறுவர்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் 16 வயதுக்குட்பட்ட 5,780 சிறுவர்கள் பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகக்கூடிய ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாக அண்மைய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.அனுராதபுரம் மாகாண சபை மண்டபத்தில், அமைச்சர் வசந்த சமரசிங்க மற்றும் ஆளுநர் வசந்த ஜினதாச ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் வடமத்திய மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் டி.பி. சுகதபால இந்த விபரங்களை வெளியிட்டுள்ளார்.பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ள சிறுவர்களில் 4,248 பேர் மிக அதிகமான ஆபத்தை எதிர்நோக்கியுள்ள (High-risk) பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை மாவட்டத்தில் பாதுகாப்பற்ற நிலையிலுள்ள சிறுவர்கள் அதிகளவில் தம்புத்தேகம பகுதியிலிருந்தே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அனுராதபுரம் மாவட்டத்தில் பாலியல் துஷ்பிரயோகங்கள் அதிகளவில் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டிய பிரதி பொலிஸ்மா  அதிபர், அதற்கான உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களை முன்வைத்தார்.அதன்படி கடந்த ஆண்டில் மாத்திரம் 36 பாலியல் துஷ்பிரயோக வழக்குகள் பதிவாகியிருந்தன. நடப்பு ஆண்டில், கடந்த ஐந்து மாத காலப்பகுதியில் மாத்திரம் 24 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் பதிவாகியுள்ளன.பல குடும்பங்களில் உள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளை உறவினர்களின் பராமரிப்பில் விட்டுவிட்டு வெளிநாடுகளுக்கு வேலைக்குச் சென்றுள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.இவ்வாறு தற்காலிகப் பராமரிப்பில் விடப்படும் பிள்ளைகள் பல சந்தர்ப்பங்களில் போதிய கவனிப்பின்றி அலட்சியப்படுத்தப்படுவதாகவும், அவர்களுக்குத் தேவையான முறையான அவதானமும் பாதுகாப்பும் வழங்கப்படத் தவறுவதே இந்நிலைமைக்கு முக்கிய காரணம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.பாதுகாப்பற்ற நிலையில் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள இந்தச் சிறுவர்கள் குறித்து காவல்துறை உன்னிப்பான கண்காணிப்புகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement